பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் அனைத்தும் அண்மைக்காலமாக எதிர்பார்க்காத வசூலை அள்ளி புதிய சாதனை படைத்து வருகிறது தமிழ்நாட்டில் அஜித்தின் வலிமை திரைப்படம் இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகியிருந்தாலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல வசூல் வேட்டை நடத்தியது.
அதன் பிறகு வெளியான எதற்கும் துணிந்தவன், பீஸ்ட் ஆகிய படங்கள் சுமாரான வசூலை அள்ளின. பீஸ்ட் படத்தை தொடர்ந்து அடுத்த நாளே வெளியான கன்னட படமான கே ஜி எஃப் 2 இந்திய அளவில் ஏற்கனவே நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது படமும் எதிர்பார்த்தது போல் சிறப்பாக இருந்ததால் அனைத்து மக்களையும் வெகுவாக கவர்ந்து இழுத்து.
அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் மட்டுமே சுமார் 1200 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது இந்த படத்தை போலவே இந்த ஆண்டு வெளிவந்த RRR திரைப்படமும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் அள்ளி புதிய சாதனை படைத்தது.
இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான படங்கள் நல்ல வசூல் வேட்டை நடத்தி இருந்தாலும் ஒரு சில டாப் ஹீரோக்கள் படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாமல் சொதப்பியது இது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கின்ற நிலையில் மார்ச், மே ஆகிய மாதங்களில் வெளியான படங்கள் எவ்வளவு ஆன்லைன் புக்கிங் நடந்திதுள்ளது என்பது குறித்து புக் மை க்ஷோ ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் எந்தப் படம் அதிகமாக உள்ளது என்பது குறித்து விவரித்துள்ளது அது குறித்து பார்ப்போம். கேஜிஎப் 2 – 17.1 மில்லியன், RRR – 13.4 மில்லியன், பீஸ்ட் -2.67 மில்லியன்.