டாப் லிஸ்டில் இருந்த சூர்யாவை கீழே இறக்கி விட்ட கே ஜி எஃப் 2.! இனி ராக்கி பாய் தான் முதலிடம்

kgf-suriya
kgf-suriya

இந்திய திரைப்படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படத்தின் சாதனையை தற்போது கேஜிஎப் திரைப்படம் கைப்பற்றியுள்ளது. தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படத்திற்கு போட்டியாக களமிறங்கிய திரைப்படம்தான் கே ஜி எஃப். பீஸ்ட் திரைப்படத்தை நெல்சன் டிலிப்குமர் இயக்கியிருந்தார் அதேபோல் kgf திரைப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இரண்டு திரைப்படங்களும் பான் இந்திய திரைப்படங்களாக வெளியாகியது. பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியது அதேபோல் kgf திரைப்படமும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. கேஜிஎப் திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது 2018ஆம் ஆண்டு வெளியாகிய kgf என்ற திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றி  ரசிகர்களின் ஆழ்மனதில் பதிந்தது இதனை அடுத்து 4 வருடங்களுக்கு பிறகு தற்போது இரண்டாவது பாகம் உருவாக்கி வெளியாகியுள்ளது அதை ஆர்வத்துடன் ரசிகர்கள் பலரும் இரண்டாவது பாகத்தை பார்த்து வருகிறார்கள் அந்தளவு படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. தமிழகத்தில் கேஜிஎப் திரைப்படத்திற்கு 300க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கிடைத்துள்ளது.

உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் இத்திரைப்படம் வெளியிடப்பட்டது மேலும் முன்பதிவு கலெக்ஷனில் kgf உலகம் முழுவதும் 56.6 கோடி வசூல் இருக்கிறது என தகவல் கிடைத்துள்ளது. முதல் நாளில் வசூலில் 160 கோடிக்கு மேல் கேஜிஎப் திரைப்படம் வசூலாகி உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியத் திரைப்படங்களில் அதிக ரேட்டிங் பெற்ற திரைப்படம் என்ற சாதனையை கேஜிஎப் இரண்டாவது பாகம் தற்போது பெற்றுள்ளது.

அதாவது இதற்கு முன்பு சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படம் 8.4 ரேட்டிங் பெற்று இருந்தது ஆனால் தற்போது  யாஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் kgf 2  திரைப்படம் சூர்யாவின் ஜெய் பீம் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது.