என்னதான் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் தன்னுடைய தந்தையின் தொழிலை செய்து வந்தவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூவின் இவரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது. கன்னட சினிமாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகர் யாஷ் இவர் கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் ரிலீசானது.
இந்த நிலையில் கேஜிஎப் திரைப்படத்தை பிரசாந்த் நீல் அவர்கள் தான் இயக்கியிருந்தார் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது இதன் இரண்டாம் பாகம் உருவாக்கியது 3 வருடங்களுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ள இந்த நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
கேஜிஎப் திரைப்படம் இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுள்ளது. அதேபோல் தமிழில் டப் செய்யப்பட்டு மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் என்றால் அது கேஜிஎப் திரைப்படம் தான். மேலும் கேஜிஎப் திரைப்படம் கன்னட சினிமா வரலாற்றிலேயே யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 கோடி தாண்டி வசூலித்தது முதல் பாகம்.
இந்த நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு வெளியாகிய இரண்டாவது பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது அது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் 19 வயதான உஜ்வால் தான் இந்த திரைப்படத்தின் எடிட்டர். இந்த தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மேலும் இந்த திரைப்படத்தில் யாஷ் அவர்களுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ரவீனா டாண்டன் பிரகாஷ்ராஜ் மாளவிகா ஆகியோரும் நடித்திருந்தார்கள். மேலும் கேஜிஎப் திரைப்படம் 10,000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது உலகம் முழுவதும்.
இந்த திரைப்படத்தில் 19 வயது உஜ்வால் எடிட்டராக பணியாற்றியது போல் முதல் பாகத்திலும் இரண்டாவது பாகத்திலும் தனது இசையின் மூலம் படத்திற்கு கூடுதல் பிரமிப்பை ஏற்படுத்தி கொடுத்தவர் ரவி பஸ்ருர் இந்த நிலையில் இவரைப் பற்றி தெரியாத சில விஷயங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ரவி பஸ்ரூர் தன்னுடைய ஆரம்ப காலத்தில் இரும்பு தொழில் செய்து வந்தார் ஏனென்றால் இவரின் தந்தை இரும்பு தொழில் செய்து வந்தவர் அதனால் அதனை செய்துவந்தார் பின்பு தன்னுடைய உழைப்பால் இசையமைப்பாளராக உருவெடுத்தார். விடா முயற்சியாலும் தன்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே இசையை கற்றுக்கொண்டு இசையமைப்பாளராக உருமாறி உள்ளார்.
அதேபோல் இவருக்கு திரை உலகின் முதல் வாய்ப்பைக் கொடுத்தது KGF பட இயக்குனர் பிரசாந்த் நீல் தான். இவர் முதல்படமான உக்கிரம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் அதனைத் தொடர்ந்து பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார் இருந்தாலும் இவரை இந்திய அளவில் மிகவும் பிரபலமான மாற்றியது கேஜிஎப் முதல் பாகம் தான். அதன் பிறகு பாலிவுட்டில் சல்மான் கான் திரைப்படத்திலும் ரவிபஸ்ரூர் இசை அமைத்துள்ளார்.
இந்த நிலையில் ரவி பஸ்ரூர் தன்னுடைய தந்தையின் இரும்பு பட்டறையில் வேலை செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரையும் ஈர்த்துள்ளது இந்த வீடியோ லாக் டவுன் செயபட்ட நேரத்தில் எடுக்கப்பட்டது. இரண்டாவது பாகம் வெளியாவதற்கு முன்பே இந்த வீடியோ வெளியாகியுள்ளது.