புதிய திரைப்படம் வெளியானால் அந்த திரைப்படம் ஒரு சில மாதங்களில் OTT இணையதளத்தில் வெளியிடப்படும் அதேபோல் ஒரு சில மாதங்களில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும். அப்படி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் படங்களை பார்க்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் இருந்த திரைப்படம் பீஸ்ட் மற்றும் கே ஜி எஃப் இந்த இரண்டு திரைப்படங்களும் கடந்த ஏப்ரல் 13ம் தேதி மற்றும் 14 ஆம் தேதி வெளியாகியது இந்த இரண்டு திரைப்படங்களும் நேரடியாக மோதிக் கொண்டன இதில் பீஸ்ட திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது ஆனால் கேஜிஎப் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
அதுமட்டுமில்லாமல் இரண்டு திரைப்படங்களும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த நிலையில் பீஸ்ட் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய வசூலை அடையவில்லை ஆனால் கேஜிஎப் திரைப்படம் பாகுபலி திரைப்படத்தின் வசூலை முறியடித்தது அதுவும் ஏழே நாட்களில். அதனால் KGF திரைப்படம் அடுத்த சாதனையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.
இந்த நிலையில் கேஜிஎஃப் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்கிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் முதல் பாகத்தை பார்க்காத மக்களும் KGF இரண்டாவது பக்கத்தை பார்க்க திரையரங்கிற்கு வருகிறார்கள் இப்படி இரண்டாவது பாகத்தை பார்ப்பதற்காக வரும் மக்கள் முதல் முதல் பாகத்தை பார்ப்பதற்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது அதாவது வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மாலை நான்கு முப்பது மணிக்கு KGF முதல் பாகம் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்படுகிறது.
அதனால் பல மக்கள் மற்றும் ரசிகர்கள் KGF முதல் பக்கத்தை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள்.