கே ஜி எஃப் இயக்குனரின் அடுத்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.! மிரள போகும் திரையுலகம்

kgf

பாகுபலி என்ற திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரபாஸ்.  அதன்பிறகுபிரபாஸ் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்த இந்திய அளவில் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார் தற்போது இவர் ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன் தீபிகா படுகோன் ஆகியோருடன் இணைந்து நடித்து வருகிறார், இந்த திரைப்படம் 21ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் பிரபாஸ் தன்ஹாஜி பட இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதி புரூஸ் என்ற 3டி திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் அவருடன் இணைந்து நடிக்கிறார்.

இந்த திரைப்படம் ஜனவரி மாதம் 2021 ஆம் ஆண்டு படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,  அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

prabhas
prabhas

படத்திற்கு சலார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படத்தில் இருந்து பஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது இந்த படத்தை கேஜிஎப் படத்தை தயாரித்த ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தின் சூட்டிங் பணிகள் கேஜிஎப் சாப்டர் 2 முடிந்தவுடன் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடக்க இருக்கிறது.

மேலும் படத்தில் இதுவரை பார்க்காத பிரபாசை ரசிகர்கள் பார்ப்பார்கள்,  அதேபோல் பிரபாசை ரசிகர்கள் ரசிப்பார்கள் எனவும் பிரசாந்த் நீர் கூறியுள்ளார். இந்த நிலையில் பிரபாஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் சலார் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஆகிய அனைத்து மொழிகளிலும் வெளியிட ஹொம்பாலே நிறுவனம் முடிவு செய்துள்ளது.

salar