கொஞ்சம் கூட யோசிக்காமல் கேஜிஎஃப் படக்குழு செய்த மிகப் பெரிய தவறு..!

kgf 2 movie

பிரசாந்த் நீல் இயக்கியுள்ள கே ஜி எஃப் திரைப்படத்தில் யாஷ் நடித்திருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிபெற்றது இதனை தொடர்ந்து மீண்டும் கே ஜே படக்குழு இரண்டாவது பாகத்தை எடுக்க முடிவு செய்தது அதேபோல் இரண்டாவது பாகத்திலும் யாஷ் தான் ஹீரோவாக நடித்துள்ளார்.

முதல் பாகத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்ததால் இதன் இரண்டாவது பாகத்திற்கு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது அதேபோல் அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இரண்டாம் பாகம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது படத்தில் ஒரு இடத்தில் கூட குறை சொல்ல முடியவில்லை என படத்தை பார்த்த ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

இருந்தாலும் ரசிகர்களுக்கு ஒரே ஒரு விஷயம் மட்டும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது அதாவது கேஜிஎப் முதல் பாகத்தில் கதை சொல்லும் பின்னணி குரல் ஒன்று ரசிகர்களை பெரிதாக கவர்ந்தது அந்தக் குரலில் பேசியவர் அந்த குரலுக்கு சொந்தக்காரர் தமிழ் சினிமாவின் நடிகர் நிழல்கள் ரவி தான். நிழல்கள் ரவியின் அந்தக் குரல்தான் கேஜிஎப் திரைப்படத்திற்கு பலம் என்றே கூறலாம் அந்த அளவு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

ஆனால் இந்த இரண்டாவது பாகத்தில் நிழல்கள் ரவி க்கு பதிலாக பிரகாஷ்ராஜை வைத்து கதை சொல்லும் அந்த கதாபாத்திரத்தை முடித்துள்ளார்கள் இதுதான் தற்பொழுது ரசிகர்களின் வருத்தத்திற்கு காரணமாக இருக்கிறது ஏனென்றால் முதல் பாகத்தில் நிழகள் ரவியை வைத்து கதையைக் கூறிவிட்டு இரண்டாவது பாகத்தில் பிரகாஷ்ராஜை வைத்து முடித்துள்ளார்கள்.

முதல் பாகத்தில் நிழல்கள் ரவியின் குரல் கம்பீரமாகவும் ரசிகர்களை படத்தை பார்க்க தூண்டும் வகையிலும் ஒரு விதமான உணர்வை கொடுத்து ரசிகர்களை படத்திற்குள் இழுத்தது அதேபோல் அந்த வசனங்கள் கூட அவர்களின் அடிமனதில் மிகவும் ஆழமாக பதிந்தது அந்த அளவு கம்பீரமான குரலுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது.

ஆனால் இந்த இரண்டாவது பாகத்தில் பிரகாஷ் ராஜ் அவர்களின் குரலுக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை இது அந்தத் திரைப்படத்திற்கு மிகப்பெரிய குறையாக இருக்கிறது இதனை சமூகவலைதளத்தில் நிழல்கள் ரவி அவர்களிடம் நீங்கள் ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள் அதற்கு பதிலளித்த நிழல்கள் ரவி உங்களுடைய எதிர்பார்ப்பு ஏமாற்றம் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளது.

நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கு மிகவும் நன்றி ஆனால் இந்த இரண்டாம் பாகத்தில் எதற்காக என்னுடைய குரலை பயன்படுத்தவில்லை என்பது மட்டும் எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.