கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம்.! அதிர்ச்சி அடையும் ரசிகர்கள்.

kgf movie actor
kgf movie actor

KGF முதல் பாகம் மற்றும் KGF இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகர் ஒருவர் திடீரென மரணம் ஆகியுள்ளது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கன்னட சினிமாவில் பிரசாந்த் நில் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம்தான் கேஜிஎப் இந்த முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதால் அடுத்த பாகத்தை எடுக்க படக்குழு முடிவு செய்தது இந்த நிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகம் ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தில் நடித்து வந்தவர் மோகன் ஜூனேஜா  என்பவர் திடீரென இன்று காலை காலமானார். அவருக்கு தற்போது வயது 54 ஆகும் கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நலம் சரியில்லாமல் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவர் KGF திரைப்படத்தில் ராக்கி பாய் பெருமையைப் பேசும் விதமாக பத்திரிக்கையாளர்களிடம் ராக்கி பாய் கதையை சொல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மோகன். இவர் KGF  படம் மட்டுமல்லாமல் கன்னட திரைப்படத்திலும் நடித்துள்ளார்  இவரின் மறைவு கன்னட சினிமாவில் மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.

மேலும் இவரின் இறுதி சடங்கு தன்னுடைய சொந்த ஊரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது ஒரு பக்கம் KGF இரண்டாவது பாகம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இவரின் இழப்பு கேஜிஎஃப் படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.