தெலுங்கு படம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து முடித்துள்ள திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வெளிவர இருக்கிறது என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதே தினத்தில் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.
இதனால் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க வாரிசு திரைப்படத்திற்காக பட குழு தீவிரமாக புரமோஷன் செய்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் நடிகர் விஜய் ஒருபக்கம் பிரமோசன் செய்து வருகிறார். இந்த நிலையில் வாரிசு திரைப்படம் துணிவு திரைப்படத்திற்கு ஈடு ஆகாது என்று பல விமர்சனங்கள் எழுந்து இருக்கிறது.
இந்த நிலையில் சினிமா பிரபலம் ஒருவர் ஊடகத்திற்கு பேட்டி அளிக்கும் போது வாரிசு திரைப்படத்தில் மூன்று சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் அதிலும் அந்த மூன்று சண்டை காட்சிகளும் கேஜிஎப் பட லெவலுக்கு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் இந்த மூன்று சண்டைக்காட்சிகளுமே துணிவு திரைப்படத்திற்கு இணையாக இருக்கும் என கூறியுள்ளார்.
வாரிசு திரைப்படம் குடும்ப செண்டிமெண்டாக எடுக்கப்பட்டது என்று தான் இத்தனை நாளாக ரசிகர்கள் கூறி வந்தார்கள் ஆனால் வாரிசு திரைப்படம் ஒரு கேஜிஎப் ரேஞ்சுக்கு எடுக்கப்பட்டு இருக்கிறது என்ற உடனே ரசிகர்கள் மேலும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் துணிவு திரைப்படத்திற்கு இணையாக அமைந்திருக்கிறது வாரிசு திரைப்படம் என்றும் கூறி வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சினிமா பிரபலங்கள் இரண்டு நடிகர்களுமே ஒருவரை ஒருவர் சலித்தவர்கள் கிடையாது ஆகையால் இருவர்களின் படங்கள் நன்றாக ஓடக்கூடிய படம் தான் ஆகையால் இரண்டு படங்களும் வெற்றி அடைய வேண்டும் என கூறி வருகின்றனர்.