பாகுபலி பிரபாஸ்ஸின் ஹேர் ஸ்டைலுக்கு பல லட்சங்களை செலவு செய்யும் கேஜிஎஃப் பட இயக்குனர்.! வாய் பிளக்கும் தெனிந்திய திரையுலகம்.

prabhas
prabhas

கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த தோடு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தவர்தான் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் யாரும் எதிர்பார்க்காத KGF என்ற மாபெரும் ஒரு படத்தை கொடுத்து தனது திறமையை வெளி உலகிற்கு காட்டினார்.

இந்த படத்தை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தையும் பிரசாந்த் நீல் வெற்றிகரமாக எடுத்துள்ளார் ஆனால்  கொரோனா காரணத்தால் இந்தப் படம் இதுவரை ரிலீசாகாமல் தேதி மட்டும் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

அதுவரை சும்மா இருக்க வேண்டாம் என்பதற்காக உடனடியாக பாகுபலி ஹீரோ பிரபாஸை வைத்து சலார் என்ற படத்தை எடுத்துள்ளார் இந்த திரைப்படம் தற்போது நான்கு மொழிகளில் உருவாகி வருவதால் படத்தை மிக திறமையாக கையாண்டு எடுத்து வருகிறார்.

இந்த படமும் மிகப்பெரிய ஒரு வெற்றி பெறும் என மக்கள் கருதுகின்றனர் மேலும் ஒவ்வொரு சீனையும் வேற லெவல் எடுக்க அதிக செலவுகளையும் செய்து வருகிறார் பிரசாந்த் நீல் அந்த வகையில் நடிகர் பிரபாஸ்ஸின் ஹேர் ஸ்டைலுக்கு மட்டும் சுமார் 4 லட்சம் ரூபாய் செலவு செய்து உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

இச்செய்தி கேட்ட பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கூட இதற்கு முன்பு இருந்த டாப் நடிகர்கள் கூட இவ்வளவு செலவு செய்ததில்லை என கூறி கமெண்ட் அடித்து வருவதோடு மட்டுமில்லாமல் ஒரு சிலர் அதிர்ச்சியாகியும் உள்ளனர்.