KGF film actor who is going to touch the pinnacle on screen: ஒரு நேரத்தில் கன்னட சினிமாவை அனைவரும் பார்த்து கைதட்டி சிரித்துக் கொண்டிருந்த நிலையில் கே ஜி எஃப் என்ற திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்கள். இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் பல்வேறு விருதுகளையும் வாங்கிக் கொடுத்து விட்டது.
பொதுவாக ரசிகர்கள் தனது மொழியில் நடிக்கும் நடிகர்களை மட்டுமே தூக்கி வைத்து கொண்டாடி வருவார்கள் ஆனால் தற்போது அதை தலைகீழாக மாற்றிய யாஷ் உலகில் உள்ள பல்வேறு மொழி ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
இவ்வாறு உருவான இந்த கேஜிஎப் திரைப்படத்தை பிரபல இயக்குனர் பிரசாந்த் மேல் என்பவர்தான் இயக்கியிருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படத்தில் அடுத்த பாகம் ஆனது தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் ஜூலை 17ஆம் தேதி வெளியாக உள்ள இந்த கே ஜி எஃப் 2 திரைப்படம் ஆனது குறிப்பிட்ட தேதியில் இருந்து தள்ளி போவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு இந்த மெகா ஹிட் திரைப்படத்தில் நடித்த நமது நடிகரிடம் பல்வேறு மொழி இயக்குனர்களும் கதை சொல்லி வருகிறார்களாம்.
அந்த வகையில் தற்போது மகேஷ்பாபுவின் ஆஸ்தான இயக்குனரான ஜெகன்நாத் என்பவர் கேஜிஎப் நடிகரை வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளாராம். இவர் சமீபத்தில் விஜய் தேவர்கொண்டா வை வைத்து லிகர் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன
அதுமட்டுமல்லாமல் இவர் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படமானது கன்னட மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.