சூர்யாவின் “கங்குவா” படத்தில் இணைந்த கேஜிஎப் பட நடிகர்.? அட இவரா.. அப்போ படம் ஹிட் தான்

surya-
surya-

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி இயக்குனராக ஓடிக் கொண்டிருப்பவர் சிறுத்தை சிவா. இவர் தமிழில் முதலில் அஜித்தை வைத்து வீரம் என்னும் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து வேதாளம், விவேகம், விஸ்வாசம் என அஜித்தை வைத்து அடுத்தடுத்து நான்கு படங்களை எடுத்தார்.

இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த திரைப்படத்தை எடுத்தார் இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று 300 கோடிக்கு மேல் அள்ளியது. இந்தப் படத்தைப் பார்த்த பலரும் சிறுத்தை சிவா தொடர்ந்து அப்பா – மகள் செண்டிமெண்ட், அண்ணன் – தங்கை சென்டிமென்ட் போன்ற படங்களை எடுத்து வருவதாக அவரை பலரும் விமர்சித்தனர்.

இதற்கு தக்க பதிலடி கொடுக்க தற்பொழுது சூர்யாவுடன் இணைந்து ஒரு புதிய படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்திற்கு “கங்குவா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. படம் முழுக்க முழுக்க சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது. மேலும்  இந்த படத்தில் ஆக்சனுக்கு பஞ்சமில்லை என தெரிய வருகிறது.

கங்குவா படத்தில் சூர்யாவுடன் இணைந்து யோகி பாபு, கிங்ஸ்லி,கோவை சரளா, திஷா பத்தானி, ஆனந்தராஜ் உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிகைகள் இந்த படத்தில் நடித்த வருகின்றனர்.  இந்த படம் மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் ஐந்து மொழிகளுக்கு மேல் ரிலீசாக உள்ளதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

அண்மையில் கூட படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர்களை வெளியிட்ட நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. கே ஜி எஃப் 1,  கேஜிஎப் 2 போன்ற திரைப்படங்களில் மிரட்டிய பி. எஸ். அவினாஷ் இந்த திரைப்படத்தில் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது இந்த தகவல் தற்பொழுது இணையதள பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

avinas
avinas