ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி இந்த மாஸ் நடிகரை வைத்து நான் படம் இயக்குகிறேன்.! KGF இயக்குனர் அதிரடி.!

rajini-vijay-ajith
rajini-vijay-ajith

ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம்தான் கேஜிஎப் இந்த திரைப்படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் நீள்  இயக்கியிருந்தார். கே ஜி எஃப் முதல் பாகத்தை இயக்கி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும்  வெற்றியை நிலைநாட்டினார் இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் விஜயின் பீஸ்ட் திரை படத்துடன் மோத இருக்கிறது.  இந்த நிலையில் இந்த இரண்டு திரைப்படங்களின் முன்பதிவு மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள கேஜிஎப் இரண்டாவது பாகத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

அதேபோல் பீஸ்ட் திரைப்படத்தை பற்றி நாம் சொல்லவே வேண்டாம் அந்த அளவு வெறித்தனமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரசாந்த் நில் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். பிரஷாந்த் நீல் அடுத்ததாக யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற எதிர்பாப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் அவர் கொடுத்த பேட்டியில் சமீபத்தில் விஜய் சார் ஒரு நல்ல லெஜென்ட் எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் அவருடைய ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி ஒரு படத்தை இயக்க நான் ரெடி என கூறியுள்ளார் இந்த தகவல் விஜய் ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தளபதி விஜய் புதுச்சேரி முதல்வரை சந்தித்துள்ளார் அதேபோல் பிரசாந்த் நீல் அவர்களையும் சந்தித்துள்ளார் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

பிரசாந்த் நீல் அவர்களிடம் கதையை கேட்பதற்கு  அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தளபதிவிஜய் ஏற்கனவே கேஜிஎப் திரைப்படம் போல ஒரு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை பட்டுள்ளதாகவும்  தகவல் வெளியான நிலையில் பிரசாந்த் நில்   விஜய்யை இயக்க ஆசைப்படுவதும் உறுதியாகியுள்ளது  இது மட்டும் ரசிகர்களுக்கு தெரிந்துவிட்டால் ரசிகர்களின் ஆசை அதுவே என்றால் விஜய்  அதை கட்டாயம் செய்வார்.

பிஸ்ட் திரைப்படம் வருகின்ற 13ம் தேதியும் கேஜிஎப் திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி ரிலீசாக இருப்பதால் இரண்டு திரைப்படங்களில் எந்து திரைப்படம் வசூலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிந்துகொள்ள ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.