பாக்ஸ் ஆபீஸ் கிங் விஜய்க்கு ஆப்பு வைக்க வரும் கேஜிஎப்.? தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை திரையரங்குகளை கைப்பற்றுமா..

kgf and beast
kgf and beast

கொரோனா மூன்றாவது அலை சற்று குறைந்ததை அடுத்து பல்வேறு டாப் நடிகர்கள் படங்கள் அடுத்தடுத்து வெளியாகின்றன அந்த வகையில் தமிழில் வலிமை, எதற்கும் துணிந்தவன் ஆகிய திரைப்படத்தை தொடர்ந்து வருகின்ற ஏப்ரல் 13, 14 தேதிகளில் அடுத்தடுத்த திரைப்படங்கள் வெளிவருகின்றன.

அந்த வகையில் ஏப்ரல் 13ம் தேதி நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பீஸ்ட் வெளிவர இருக்கிறது அதற்கு அடுத்த நாளே கன்னட சினிமாவை திரும்பி பார்க்க வைத்த கேஜிஎப் படத்தின் இரண்டாவது பாகம் வெளிவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜயின் மார்க்கெட் அதிகமாக இருப்பதால் பீஸ்ட் படம் தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம் ஆகிய இடங்களில் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாள் இடைவெளிக்கு பிறகு கேஜிஎப் 2 திரைப்படம் வெளிவருகிறது படம் சிறப்பாக  இருக்கும் பட்சத்தில் விஜயின் திரைப்படத்தின் வசூலை பாதிக்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

தமிழில் ஏற்கனவே கேஜிஎப் திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்றுள்ளதால் ரசிகர்களும், மக்களும் அந்த திரைப்படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்து இருக்கின்றனர். அதே சமயம் பீஸ்ட் திரைப்படத்திற்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் அல்ல.. ஆனால் இந்த இரண்டு  பிரம்மாண்ட படத்தில் எதோ ஒன்னு தான் இந்த ரேசில் வெற்றி பெறும்.

தமிழகத்தில் 1000 திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியாகிறது மறுநாள் கேஜிஎப் திரைப்படம் வெளிவருவதால் எப்படியும் 30% திரையரங்குகளை கைப்பற்றிய விடும் இதனால் விஜய்யின் மார்க்கெட் தமிழிலேயே அடிவாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.