KGF 2 – ஆயிரம் கோடி வசூல்.. தடபுடலாக சம்பளத்தை உயர்த்திய இயக்குனர் பிரசாந்த் நீல்.!

kgf-
kgf-

தென்னிந்திய சினிமாவுலகில் அண்மைகாலமாக பிரமாண்ட பட்ஜெட்டில் பல படங்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து உள்ளன குறிப்பாக ராஜமவுலியின் பாகுபலி, பாகுபலி 2   படத்தை தொடர்ந்து மிகப் பிரம்மாண்ட பொருட்செலவில் RRR படத்தையும் எடுத்து அசத்தினார்.

அதனை தொடர்ந்து பல்வேறு இயக்குனர்கள் பிரமாண்ட பட்ஜெட்டில் படங்களை இயக்குகின்றனர் அவர்களில் ஒருவராக இளம் இயக்குனர் பிரசாந்த் நீல்  நடிகர் யாஷை வைத்து கேஜிஎப் என்னும் படத்தை மிரட்டலாக எடுத்திருந்தார்  அதன் தொடர்ச்சியாக கேஜிஎப்  இரண்டாவது பாகம் தடபுடலாக பிரமாண்ட பட்ஜெட்டில் உருவானது.

பல்வேறு தடைகளை சந்தித்ததால்  இரண்டு வருடங்கள் கழித்து ஒரு வழியாக இந்த திரைப்படம் கடந்த மாதம் ஏப்ரல் 14 ஆம் தேதி உலக அளவில் ரிலீசானது.ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட பல மடங்கு சிறப்பாக இருந்த காரணத்தினால் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்று அனைத்து மொழிகளிலும் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை கே ஜி எஃப் 2 திரைப்படம் உலக அளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இன்னும் திரையரங்கில் கூட்டம் குவிந்து வருவதால் இன்னும் பல கோடிகளை அள்ளி புதிய சாதனை படைக்க ரெடியாக இருக்கிறது என்ற திரைப்படத்தின் மூலம் பிரசாந்த் நீல் மற்றும் யாஷ் அவர்களின் சினிமா பயணம் அசுர வளர்ச்சியை எட்டியுள்ளது.

இப்படி இருக்கின்ற நிலையில் கே ஜி எஃப் படம் ஹீரோ  யாஷ் தனது சம்பளத்தை உயர்த்தினாரோ.. இல்லையோ படத்தின் இயக்குனர் பிரசாந்த்  நீல் அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார் இனி அவர் இயக்கும் ஒவ்வொரு படத்துக்கும் சுமார் 50 கோடியை சம்பளமாக வாங்க உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக இப்போது பிரபாஸை வைத்து சலார் படத்தை உருவாக்கி வருகிறார் இந்த படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் தனது சம்பளத்தை 100 கோடியாக உயர்த்த வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.