கேஜிஎப், பீஸ்ட் படங்களை தூக்கி சாப்பிட்ட காத்து வாக்குல ரெண்டு காதல் – ஆச்சரியப்பட்டுப் போன தளபதி ரசிகர்கள்.!

kaathu vaagula rendu kadhal
kaathu vaagula rendu kadhal

தமிழ் சினிமா உலகில் இயக்குனர் விக்னேஷ் சிவன் காமெடி காதல் கலந்த படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார் இவர் இயக்கத்தில் அண்மையில் வெளியான திரைப்படம் தான் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விக்னேஷ் சிவனின்  காதலி லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா மற்றும் விஜய் சேதுபதி போன்ற நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து அசத்தி உள்ளனர்.

படம் முழுக்க முழுக்க காமெடி ரொமாண்டிக் அதிகம் இருப்பதால் இந்த படம் ரசிகர்களையும் தாண்டி தற்போது பொதுமக்களை வெகுவாக திரையரங்கு பக்கம் இழுத்துள்ளது படம் வெளியான முதல் நாளில் இருந்து இந்த படம் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் படக்குழு செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது அண்மையில் விஜய்சேதுபதி நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகியோர்களின் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்படி இருக்கின்ற நிலையில் காத்து வாக்குல ரெண்டு  காதல் திரைப்படம் சென்னையில் வார இறுதியில் நல்ல வசூலை பெற்று அடித்து நொறுக்கி உள்ளது அதிலும் குறிப்பாக  வார இறுதி நாட்களில் இந்த படத்திற்கான மவுசு அதிகரித்து உள்ளது இதில் கடந்த வாரத்தில் அதிக வசூல் பெற்ற திரைப்படங்கள் குறித்து தற்போது விவரங்கள் வருகின்றன.
முதலிடத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இருக்கிறது அதை தொடர்ந்து கன்னட நடிகர் யாஷ் மிரட்டிய கேஜிஎப் 2 இன்றளவும் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருப்பதால் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது மூன்றாவதாக ராமச்சரன் அவரது அப்பா சிரஞ்சீவி இணைந்து நடித்த ஆச்சாரியார் திரைப்படம் தமிழகத்தில் நல்ல வரவேற்பை பெற்று கூடிக்கொண்டு இருக்கிறது.

இந்த படம் தற்போது நல்ல வசூலை பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது நான்காவதாக தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் வேட்டை நடத்துகிறது. ஐந்தாவது இடத்தில் அசோக் செல்வன் நடிப்பில் உருவான ஹாஸ்டல் திரைப்படம் இளசுகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் கண்டு வருகிறது.