கன்னட சினிமா கே ஜி எஃப் திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் KGF முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ் ,தெலுங்கு, ஹிந்தி மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் வெளியாகி வெற்றியை நிலைநாட்டியது.
கே ஜி எஃப் முதல் பாகத்தின் தாக்கம் எப்பொழுது இரண்டாவது பாகம் வரும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி KGF இரண்டாவது பாகம் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தையும் பிரசாந்த் நீல் தான் இயக்கியிருந்தார் தமிழ், தெலுங்கு ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் உருவாக்கியது.
அதேபோல் இந்த திரைப்படம் மிகவும் பிரமாண்ட வெற்றியை நிலைநாட்டியுள்ளது இதுவரை பாக்ஸ் ஆபீஸில் ஆயிரத்து 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது அதேபோல் கேஜிஎப் இரண்டாவது பாகத்தின் OTT ரிலீசை பிரபல நிறுவனம் ஒன்று கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது அதாவது அமேசான் பிரைம் நிறுவனம்தான் கேஜிஎப் திரைப்படத்தின் OTT ரிலீசை கைப்பற்றியுள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் மூன்றாவது பாகம் உருவாவது போல் காட்டியிருந்தார்கள் இந்த நிலையில் மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் படக்குழுவும் மூன்றாவது பாகத்தை எடுக்கும் பணியில் விரைவில் ஈடுபட இருக்கிறார்கள் இந்த மூன்றாவது பாகத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோக்கள் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இந்தநிலையில் KGF மூன்றாவது பாகத்தில் வில்லனாக பாகுபலி, பாகுபலி இரண்டாவது பாகத்தில் நடித்த ராணா இந்த KGF 3 திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதனால் படம் பிரம்மாண்டமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது இந்த நிலையில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .