ஹாலிவுட்டை மிரட்டபோகும்  கேஜிஎஃப்-3 .! மாஸ் காட்டும் பிரசாந்த் நில்.

KGF
KGF

ஒட்டுமொத்த சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த ஒரு திரைப்படம் என்றால்  கேஜிஎஃப் மட்டும்தான். இந்த படத்தின் முதல் பாகம் 2018ம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியானது.  கேஜிஎஃப் முதல் பாகத்தின் மொத்த செலவு 80 கோடி ஆனால் வசூல் செய்ததோ 250 கோடி.

கேஜிஎஃப் திரைப்படத்தை பிரசாந்த் நில் அவர்கள் இயக்கியுள்ளார். கேஜிஎஃப் பாகம் ஒன்றிற்கு பிறகு ஒட்டு மொத்த ரசிகர்களின் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது என்று தான் சொல்ல வேண்டும்.

அதனைத் தொடர்ந்து கேஜிஎஃப் இரண்டாவது பாக்கமும் கடந்த ஏப்ரல் 14ம் தேதி வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை சற்று அதிகரித்து உள்ளது. இந்த படத்தில் உள்ள ஒவ்வொரு காட்சிகளையும் திரையரங்கில் ரசிகர்கள் கைதட்டி ஆரவாரத்துடன் கொண்டாடினர்.அதுமட்டுமல்லாமல் இந்த படத்தை பார்த்த ரசிகர்களுக்கு அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்க வைத்து உள்ளது.

KGF
KGF

கேஜிஎஃப் பட இயக்குனரான பிரசாந்த் நில் தற்போது பிரபாஸை வைத்து சலார் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பாதி முடிவடைந்ததால் இந்த வருடம் இறுதிக்குள் படத்தை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இந்தப் படம் முடிந்தவுடன்  கேஜிஎஃப் பாகம் முன்று படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

 கேஜிஎஃப் பாகம் 3 படத்தை 2023 ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்க உள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளது. அப்படி 2023 ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தாள் 2024லில் கேஜிஎஃப் படம் ரிலீஸ் ஆகுமாம். கேஜிஎஃப் அடுத்தடுத்த பாகங்களை  ஹாலிவுட் சினிமாவில் இருக்கும் மார்வெல் உலகம் போல  ஆரம்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.