கடந்த சில வருடங்களாகவே இந்திய சினிமா உலக சினிமாவை திரும்பி பார்க்கும் வகையில் பல திரைப்படங்கள் வெளியாகி வசூலில் மாபெரும் வெற்றியடைந்தது இந்த நிலையில் இந்திய சினிமாவின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சென்றது ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம். இந்தத் திரைப்படம் உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்றது .
பாகுபலி திரைப்படத்தை ஓரங்கட்டிவிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடும் விதமாக வெளியாகியது கேஜிஎப் திரைப்படம். இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்தது அடுத்த இரண்டாவது பாகத்தை பிரசாந்த் நீள் அவர்கள் இயக்கினார். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் கன்னட நடிகர் யாஷ், சஞ்சய் தத், ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
KGF இரண்டாவது பாகம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்ட பிறகு பல புது திரைப்படங்கள் திரைக்கு வந்துள்ளது ஆனாலும் அதை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு KGF இரண்டாவது பாகம் சக்கைபோடு போட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது அதேபோல் தமிழ் ரசிகர்கள் KGF திரைப்படத்தை விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள்.
அதேபோல் KGF திரைப்படம் கன்னட மொழியை தாண்டி தமிழ், தெலுங்கு மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் இந்தத் திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது அது மட்டுமில்லாமல் பாக்ஸ் ஆபீஸில் பல சாதனைகளையும் நிகழ்த்தியது. இந்த நிலையில் இரண்டாவது பாகத்தின் தாக்கத்திலிருந்து வெளியே வர முடியாத ரசிகர்கள் கேஜிஎஃப் மூன்றாவது பாகம் எப்போது என நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அதற்கு பதிலளித்த யாஷ் கேஜிஃஎப் இரண்டாவது பாகத்தின் நாயகன் யாஸ் கேஜிஎப் மூன்றாவது பாகம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார் அதனால் ரசிகர்கள் பலரும் கேஜிஎப் மூன்றாவது பாகத்தின் அறிவிப்பு எப்பொழுது வெளியாகும் என ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் KGF மூன்றாவது பாகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கேஜிஎப் மூன்றாவது பாகம் உலகமே வியக்கும் வகையில் தரமான கதையாக அமையும் எனவும் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள் எனவும் தகவல் கிடைத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரிக்க பிரபல தயாரிப்பு நிறுவனம் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது அதனால் அதிக பட்ஜெட்டில் KGF மூன்றாவது பாகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் உலக சினிமாவை திரும்பி பார்க்கும் வகையில் கேஜிஎப் மூன்றாவது பாகம் அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.