இளம் இயக்குனர்கள் அண்மை காலமாக சிறப்பான படங்களை கொடுத்து ஒட்டு மொத்த உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைக்கின்றன அந்த வகையில் இயக்குனர் பிரஷாந்த் நீல். கன்னட நடிகர் யாஷ் அவர்களுக்கு தங்க சுரங்கம் பற்றிய ஒரு படத்தின் கதையை சொல்லவே..
அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போக யாஷ் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் அந்த படமே முதலில் கேஜிஎஃப் என்ற பெயரில் எடுக்கப்பட்ட முதல் படம் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்தது. இதனையடுத்து உடனடியாக இதன் இரண்டாவது பாகமும் அதிரடியாக எடுக்கப்பட்டது.
இருப்பினும் பல்வேறு தடைகளை சந்தித்ததால் இரண்டு வருடங்கள் கழித்து கடந்த ஏப்ரல் 14ம் தேதி உலக அளவில் படம் ரிலீசான முதல் படத்தைவிட இரண்டாவது பாகம் சிறப்பாக இருந்த காரணத்தினால் தற்போது வசூலில் 1000 கோடியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது.
கே ஜி எஃப் 2 படத்தில் யாஷ் இறந்து விடுவது போல காண்பித்து இருந்தாலும் இதன் மூன்றாவது பாகம் வரும் என படக்குழு கடைசியில் சொல்லி முடித்தது இந்த நிலையில் நடிகர் யாஷை சந்தித்து பல்வேறு விதமான கேள்விகளை கேட்டு வருகின்றனர் அதற்கு பதிலளித்த நடிகர் யாஷ் மூன்றாவது பாகம் வெளிவரும் அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களை விட நாங்கள் திட்டமிட்டுள்ளோம் மக்கள் மற்றும் ரசிகர்கள் சொன்னால் நாங்கள் எடுக்க தயாராக இருக்கிறோம்.
இரண்டாவது பாகத்தில் சொல்ல முடியாத நிறைய விஷயங்களை நாங்கள் மூன்றாவது பாகத்தில் சொல்ல இருக்கிறோம் என கூறியுள்ளார் அடுத்தடுத்த பாகங்கள் கிடைக்க நானும் இயக்குனர் பிரசாந்த் நீலும் அடுத்தடுத்த பாகங்கள் குறித்து உள்ள கதைகளை பேசி இருக்கிறோம் நிச்சயம் உங்களுக்கு மூன்றாவது பாகம் அதை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளிவரும் என கூறியுள்ளார் நடிகர் யாஷ்.