KGF-2 டிரைலர் செய்த புதிய சாதனையை பீஸ்ட் ட்ரைலர் முறியடிக்குமா.? எல்லாம் நெல்சன் கையில தான் இருக்கு

kgf vs beast
kgf vs beast

ஒரு காலத்தில் கன்னட சினிமா பின்தங்கியிருந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு யாஷ் நடிப்பில் வெளியாகிய கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தது கன்னட சினிமா. இப்படி ஒரு திரைப்படத்தை யாரும் எதிர்பார்க்காத வகையில் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் கொடுத்திருந்தார்.

இந்தநிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது  இந்த இரண்டாம் பாகத்திலும் யாஷ் ஹீரோவாகவும் ஸ்ரீநிதி ஷெட்டி  ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய்தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய்தத் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தான் நடித்துள்ளார்.

கொரோனா காலகட்டத்தில் படத்தை ரிலீஸ் செய்யாமல் படக்குழு தள்ளி வைத்திருந்தது இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் கேஜிஎப் இரண்டாவது பாகம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது இந்த நிலையில் சமீபத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் KGF இரண்டாம் பாகத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார்கள்.

கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது அதனால் 24 மணி நேரத்திற்குள் வெளியாகிய ஐந்து மொழிகளிலும் ஒட்டு மொத்தமாக 109 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த டிரைலர் வெளியான 24 மணிநேரத்தில் இதுவரை வெளியான இந்திய திரைப்படங்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்த ட்ரைலராக புதிய சாதனையை கேஜிஎஃப் இரண்டாவது பாகத்தின் ட்ரைலர் படைத்துள்ளது.

இந்த நிலையில் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாக இருப்பதால் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை வருகின்ற ஏப்ரல் 2ஆம் தேதி மாலை  6 மணிக்கு படக்குழு ரிலீஸ் செய்ய இருக்கிறது அதனால் பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலர் கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலரை முறியடிக்குமா என பலரும் எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.