என்னை வெல்ல எதிர்ப்பவன் எவர்ரின்றி.. மாஸ் வசனத்துடன் வெளியானது கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டிரைலர்.! பீஸ்ட் -க்காக தான் இந்த மாஸ் வசனமா.!

kgf 2
kgf 2

பின்தங்கியிருந்த கணட சினிமாவை ஒரே திரைப்படத்தின் மூலம் தூக்கி நிறுத்தியவர் யாஷ். பிரசாந்த் நீள் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் கே ஜி எப் இந்த முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டியதால் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி உள்ளது. இந்த நிலையில் KGF இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் வெளியிட இருப்பதாக தகவல் வெளியான நிலையில் சூர்யா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் டிரைலரை வெளியிட்டார்.

டிரைலரின் ஆரம்பத்தில் ரத்தத்தில் எழுதிய கதை இதை மையால் எழுத முடியாது என்ற வசனத்துடன் ஆரம்பமாகும், இந்த நிலையில்ட்ரைலரில்  உள்ள ஒவ்வொரு காட்சியும் வசனங்களால் தெறிக்க விட்டுள்ளார்கள்..  அப்படி மட்டும் இல்லாமல் அப்படி எழுத வேண்டும் என்றால் நீயும் ரத்தத்தில் குளிக்க வேண்டும் என்று வசனத்துடன் அனல் பறக்க ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அதிக சண்டைக்காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் ட்ரைலரில் ஒவ்வொரு வசனத்துடன் சண்டை காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது படக்குழு. பான் இந்தியத் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்தை தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  மேலும் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்துள்ளார் இதற்கு முன் வெளியாகிய கேஜிஎப் திரைப்படத்தின் டிரைலர் 240 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்க்கப்பட்டு சாதனை பெற்ற நிலையில்.

இந்த ட்ரெய்லர் அதைவிட அதிக பார்வையாளர்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ட்ரைலரில் என்னை வெல்ல எதிர்க்க  எவன் இன்றி  என்ற மாஸ் வசனத்துடன் யாஸ் சண்டையிடுகிறார் இந்த வசனம் பீஸ்ட் திரைப்படம் இதற்கு முன் வெளியாவதால் பீஸ்ட் திரைப்படத்திற்காக படக்குழு வைத்துள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.