காலங்கள் முன்னேற முன்னேற சினிமா உலகமும் முன்னேறிக்கொண்டே இருக்கிறது அந்த வகையில் அதலபாதாளத்தில் கடந்த கன்னட சினிமாவை தூக்கி நிறுத்திய திரைப்படம்தான் கேஜிஎஃப் இந்த படத்தை வேறு ஒரு தளத்தில் பிரசாந்த் நீல் எடுத்து அசத்துகிறார்.
KGF படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடிகர் யாஷ் பின்னி பெடல் எடுத்து இருந்தார். முதல்பாகம் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் உடனே எடுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு வருடங்களாக தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வந்ததால் ஒரு வழியாக அண்மையில் படம் ரிலீசானது.
முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து அசத்தியது உலக அளவில் மட்டுமே கேஜிஎப் 2 திரைப்படம் சுமார் 1200 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்தது அண்மையில் வெளிவந்த எந்த ஒரு திரைப்படமும் இப்படி ஒரு சாதனையை செய்யவில்லை.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இதன் மூன்றாவது பாகம் உருவாக இருக்கிறது ஆனால் சில வருடங்கள் ஆகும் என கூறப்படுகிறது காரணம் இயக்குனர் பிரசாந்த் நீல் டாப் ஹீரோ பிரபாஸ் போன்ற நடிகர்களை வைத்து அடுத்தடுத்த படங்களை இயக்கி வருகிறார்.
இப்படி இருக்கின்ற நிலையில் கன்னட திரையுலகின் சூப்பர் ஹீரோவாக வலம் வரும் நடிகர் யாஷ் நேற்று கே ஜி எஃப் 2 வெளிவந்து 50 நாட்களைத் தொட்ட நிலையில் நடிகர் யாஷ் அதை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி பீர் பாட்டிலை ஓபன் செய்து பார்ட்டியை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.
OPEN THE BOTTLE 😍🔥
Yesterday's 50 Days Celebration of #KGFChapter2 #YashBOSS #Yash19 #KGF2 #KGF2onPrime @TheNameIsYash pic.twitter.com/Ue1rZHgq8q
— Yuvaraj S (@YUVA__YASHCULT) June 4, 2022