முதல் நாளிலேயே பீஸ்ட் படத்தை கதறவிட்ட “KGF 2” – வசூலில் புதிய சாதனை.

kgf-and-beast-
kgf-and-beast-

தளபதி விஜயின் பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி கோலாகலமாக திரையரங்கில் வெளியானது ஆனால் படம் எதிர்பார்த்தது போல இல்லை. மேலும் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் இருந்து கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. இதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

இதனால் நிச்சயம் பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டையை அள்ள வாய்ப்பு இல்லை  என கூறப்படுகிறது இது இப்படி இருக்க நேற்று  யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் எதிர்பார்த்ததை விட பல மடங்கு சிறப்பாக இருப்பதால் மக்கள் கூட்டம் திரையரங்கை நாடி பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் படத்தின் ஒவ்வொரு சீனும் ரசிக்கும் படியும் செம சூப்பராக எடுத்து உள்ளதால் இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் கொண்டாடிய தீர்க்கின்றனர். நிச்சயம் கேஜிஎப் 2 நாம் எதிர்பார்க்காத ஒரு வரவேற்பையும் வசூலையும் என பலரும் கூறி வருகின்றனர். கே ஜி எஃப் 2 படத்திற்கான வரவேற்பு அதிகரித்து உள்ளதால் தற்போது பீஸ்ட் படத்திற்கான வரவேற்பு குறையும் என கூறப்படுகிறது.

அதேசமயம் இன்னும் ஓரிரு நாட்களில் பல்வேறு திரையரங்குகளில் இன்னும் கேஜிஎப் 2 திரையிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன இதனால் தமிழகத்திலேயே மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளும் என தகவல்கள் வெளிவருகின்றன இந்நிலையில் கேஜிஎப் திரைப்படம் உலக அளவில் சுமார் 150 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மட்டுமே 7 கோடியும் கேரளாவில் ஆறு கோடியும் வசூல் செய்ய உள்ளதாக தெரிவிக்கின்றன. பீஸ்ட் திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் 70 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தாலும் கூட கேஜிஎப் திரைப்படம் தான் தற்போது முன்னாடி இருக்கிறது மேலும் மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தையும் கேஜிஎப் 2 தான் கவர்ந்து இழுத்துள்ளது இதனால் அடுத்தடுத்த நாட்களிலும் இமாலய வசூலை அள்ளிய ஒரு புதிய சாதனையை படைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.