சினிமா உலகில் வெற்றியடைந்த படங்கள் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு சின்னத்திரையில் உள்ள தொலைக்காட்சிகளில் வெளியிடுவது வழக்கம் அதிலும் குறிப்பாக விசேஷ நாட்களில் புது படங்கள் வெளியாகும் அந்த வகையில் வருகின்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு தொலைக்காட்சிகள்.
புதிய நிகழ்ச்சி மற்றும் புதிய படத்தை தொலைக்காட்சியில் போடுவது வழக்கம். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சன் டிவி விஜய் டிவி, விஜய் டிவி போன்றவை பல புதிய நிகழ்ச்சிகளை நடத்துகிறது ஆனால் அவர்களை விட ஒரு படி முன்னேறி ஜீ தமிழ் தொலைக்காட்சி அண்மையில் வெற்றி அடைந்த கேஜிஎப் 2 படத்தை வெளியிட இருக்கிறதாம்.
முன்னணி இயக்குனர் பிரசாந்த் நில் இயக்கத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் KGF 2. இந்த படம் திரையரங்கில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து OTT தளத்திலேயும் வெற்றிகரமாக ஓடியது. இப்போ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில்.
இந்த படம் வெளியாகுவதால் ZEE தமிழ் தொலைக்காட்சி டிஆர்பியில் முன்னேற்றத்தை அடையும். அதே சமயம் மக்களும், ரசிகர்களும் இந்த படத்தை வீட்டில் உட்கார்ந்துபடியே பார்த்து கண்டுகளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற சிறந்த படங்கள் வெளியாகுவது நிச்சயம் ஒரு வரவேற்கத்தக்க ஒன்று தான்.
தற்போது ரசிகர்கள் சொல்லி கும்மாளம் அடித்து வருகின்றனர் ராக்கி பாயை டிவியில் பார்ப்பதும் ஒரு தனி சுகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் எத்தனை மணிக்கு ஒளிபரப்பாகும் என்பது சரியாக தெரியவில்லை கால் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கே ஜி எஃப் 2 கன்பார்ம்.