சாதனையிலும் சாதனை உலக சாதனை.! மிரட்டிய கே ஜி எஃப் 2 டீசர்.!

kgf

பெரிதாக கண்டு கொல்லாமல் இருந்த கன்னட சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீள். இவர் 2018 ஆம் ஆண்டு கேஜிஎப் என்ற திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியைக் கண்டார். இந்த திரைப்படம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ரிலீசானது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் முதல் பாகமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததால் இதன் இரண்டாம் பாகத்தை பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் இயக்குனர் பிரசாந்த் நில் இதன் இரண்டாம் பாகத்தை எடுத்து முடித்துள்ளார். முதல் பாகத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதேபோல் இரண்டாவது பாகத்திலும் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ்ராஜ், ரவீணா டாண்டன்  என மிக முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் விஜய்யின் மாஸ்டர், சர்க்கார்,  ஆர் ஆர் ஆர்,  மெர்சல் ஆகிய திரைப்படங்களின் டீசர் முதல் நாளில் பெற்ற லைக் மற்றும் சாதனைகளை கேஜிஎப் இரண்டாவது பாகம் முறியடித்து விட்டது. இதன் டீசர் முதல் நாளிலேயே 3 மில்லியன் லைக்குகளை குவித்து  இந்தியாவிலேயே முதல் திரைப்படம் என சாதனை படைத்தது.

இந்தநிலையில் கேஜிஎப் இரண்டாவது பாகம் டீசர் இதுவரை 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து ஒரு மில்லியன் கமெண்ட் களையும், எட்டு மில்லியன் லைக் களையும் கடந்துள்ளது. இதனை கேஜிஎஃப் இரண்டாவது பாகத்தின் இயக்குனர் தனது டுவிட்டர் பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார்.

மேலும் உலகில் வெளியான படங்களில் 8 மில்லியன் லைக்குகளை குவித்த முதல் டீசர் என்ற பெருமையை கேஜிஎப் இரண்டாவது பாகம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.