கன்னட சினிமாவில் சாதாரண நடிகராக இருந்த யாஷ் தற்போது இந்திய அளவில் பிரபலமாக பேசப்படும் நடிகராக உருவெடுத்துள்ளார் இதற்கு காரணம் கேஜிஎப் திரைப்படம் தான் இவர் கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது கேஜிஎப் திரைப்படம் தான் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் டப் செய்யப்பட்டு உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
இதன் முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது அது மட்டுமில்லாமல் ஒரு கன்னட திரைப்படம் தமிழில் டப் செய்யப்பட்டு மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக இந்த திரைப்படத்தை பார்த்தார்கள். கேஜிஎப் திரைப்படத்தில் யாஷ் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது அதேபோல் வசூலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் முதல் பாகம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
அதே வேகத்தில் இரண்டாவது பாகத்தை எடுக்க ஆரம்பித்தார்கள் இரண்டாவது பாகம் ரிலீசாக 3 வருடங்கள் ஆகிவிட்டது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் மாளவிகா அவினாஷ், ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் தான் இயக்கியுள்ளார்.
kgf இரண்டாவது பாகம் உலகம் முழுவதும் 10,000 ஸ்கிரீனுக்கு மேல் வெளியாகி வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது பாகத்தில் கடுடனை கொன்று கே ஜி எஃப் இல் கால் தடம் பதித்து இரண்டாவது பாகத்தை தொடங்கி வைக்கிறார். ஆனால் அங்கிருக்கும் பலருக்கு யாஷ் அவர்களை பிடிக்காமல் போனது அதனால் யாஷை தூக்க வேண்டும் என பலர் சதித்திட்டம் தீட்டுகிறார்கள் அதன் பிறகு எப்படி kgf ல் இருக்கும் மக்களை காப்பாற்றுகிறார் யாஷ்.? எதிரிகளை எப்படி துவம்சம் செய்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
இந்த திரைப்படத்தில் தமிழ் வசன கர்த்தாவாக அசோக் பணியாற்றியுள்ளார்.கே ஜி எஃப் இல் எழுதிய வசனங்கள் அனைத்துமே மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தீனி போட்டுள்ளது அந்தளவு மீம்ஸ் வைரலாகி வருகிறது. அசோக் வேறு யாரும் கிடையாது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகிய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தில் நடித்தவர். அந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி அடிக்கடி கட்டிப்பிடிக்கும் நாகராஜ் அண்ணன் தான் கேஜிஎப் திரைப்படத்திற்கு வசனகர்த்தாவாக பணியாற்றினார்.
சமீபத்தில் இவர் அளித்த பேட்டியில் தான் தஞ்சாவூர் கரந்தைக் கலைக் கல்லூரியில் படித்த வந்ததாகவும் அப்போதிலிருந்தே கலை மீது அதிக ஆர்வம் இருந்து, அதிலிருந்து ஆறு வருடம் நேஷனல் லெவல் கோல்ட் மெடல் கலைத்துறையில் வாங்கியதாகவும் அதன் தாக்கம் தான் சினிமாவுக்கு கிளம்பி வந்துவிட்டேன் எனக்கு சினிமாவில் முதல் வாய்ப்பு கொடுத்தது கமல் சார்தான் அதன்பிறகு நான் உதவி இயக்குனராகவும் பணியாற்றி உள்ளேன்.
பிறகுதான் எனக்கு கேஜிஎஃப் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது ஆனால் கன்னடம் அவ்வளவாக தெரியாது கே ஜி எஃப் படத்தின் மூலம் முதன்முறையாக வசனம் எழுத ஆரம்பித்தேன் இதற்கு முன் ஆயுள் ரேகை என்ற திரைப்படத்திற்கு வசனம் எழுதினேன் கே ஜி எஃப் படம் பண்ணும்போது கொஞ்சம் பயந்தேன் இந்தத் திரைப்படத்திற்காக 150க்கும் மேற்பட்ட வாய்ஸ்களை டெஸ்ட் பண்ணினேன் டப்பிங் பண்ணும்போது இயக்குனர் கொண்டுவர நினைத்த உணர்வை கொடுத்து கவனமாக பார்த்துக் கொண்டேன்.
கன்னடத்தில் ஒரு சில வசனங்கள் மிகவும் எமோஷனலாக பேசி இருப்பார் அதை நம்ம ஊருக்கு ஏற்றுவது போல் கொஞ்சம் மாற்றி இருந்தேன் முழு படத்திற்கான வசனங்களை அவர்களிடம் 5 முறை படித்து காட்டி ஓகே வாங்கிய பிறகுதான் நடிக்க ஒப்புக்கொண்டேன் இந்த டயலாக் அனைத்தும் ரொம்பவும் பிடித்திருந்தது யாஷ் அவர்களுக்கு. நான் வசனம் மட்டுமே எழுதிய முதல் திரைப்படம் கேஜிஎப் தான்.
பொதுவாக தமிழில் அஜித், விஜய் அவர்களுக்கு இதுபோல் வசனம் எழுதினால் கைதட்டி ரசிப்பார்கள் ஆனால் யாஷ் மாதிரி புது நடிகருக்கு இதுபோல் வசனம் எழுதினால் சிரிப்பார்கள் என நினைத்தேன் ஆனால் தமிழில் நான் நினைத்ததை விட இரண்டாம் பாகம் நன்றாக வந்துள்ளது ரசிகர்களும் ரசித்து பார்கிறார்கள் என கூறியுள்ளார்.