தளபதி விஜயின் படங்கள் தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் அதனால் தான் விஜய்யின் படங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 200 கோடியை ஈசியாக தொட்டு விடுகின்றன . அண்மை காலமாக தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் மாபெரும் வசூலை அள்ளி உள்ளன.
அதே போல்தான் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் மிகப்பெரிய ஒரு வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்த்தது. ரசிகர்களும் மக்களும் எதிர்பார்த்தது போல தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் இல்லாததால் தற்போது வசூல் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது முதல் நாள் விஜய்யின் ரசிகர்கள் இந்த படத்தை பார்த்து கொண்டாடினர்.
அதனால் முதல் நாள் மட்டுமே மிகப்பெரிய ஒரு வசூலை அள்ளிய நிலையில் அடுத்தடுத்த நாட்களில் தற்போது வசூல் குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு இடங்களில் இல்ல அனைத்து இடங்களிலும் இதே நிலைமைதான் தமிழ் தெலுங்கு கன்னடா அனைத்து இடங்களிலும் இதே நிலைமை ஏற்பட்டு உள்ளதால் பீஸ்ட் படக்குழு சற்று வருத்தத்தில் இருக்கிறது.
அந்த அளவிற்கு கேஜிஎப் திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்றதே காரணம். குறிப்பாக விஜயின் கோட்டையாக கருதப்படும் ஒரு சில இடங்களில் தற்பொழுது வசூல் ரொம்ப கம்மியாக இருந்து வந்துள்ளது அந்த வகையில் தமிழ் நாட்டை தாண்டி அடுத்ததாக அதிக ரசிகர் பட்டாளம் இருக்குமென்றால் அது கேரளா தான் முதல் நாளில் பீஸ்ட் படம் வெளியாகி 6.6 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாள் கேரளாவில் 1.3 கோடி மட்டுமே வசூல் செய்து உள்ளது.
இப்படி பீஸ்ட் பாதாளத்தை சந்திக்க காரணமும் கேஜிஎப் திரைப்படம் தான் கேஜிஎப் திரைப்படம் வேற லெவல் அதாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து உள்ளதால் பொது மக்கள் மற்றும் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன இதனாலேயே பீஸ்ட் படத்திற்கான வரவேற்பு குறைந்து உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.