கேஜிஎஃப் வில்லன் கெட்டப்பில் நடிகர் பிரேம்.!! கொலை மாசான புகைப்படம் இதோ.!!

prem-actor
prem-actor

தென்னிந்திய சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தவர் நடிகர் பிரேம், பொதுவாக குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் நடிகர்கள் பிரபலம் அடைவதில்லை. ஆனால் அதையும் தாண்டி ஒரு சில நடிகர்கள் மட்டுமே மக்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடிப்பார்கள். அந்தவகையில் நடிகர் பிரேம் பல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து விட்டார்.

பெரும்பாலும் நடிகர் பிரேம் குணச்சித்திர வேடங்களில் மட்டும் தான் நடித்துள்ளார், தமிழ் முன்னணி நடிகரான விஜய், சூர்யா என பல நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார், சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது தல மற்றும் தலைவரோடு தான் நடித்ததில்லை என வெளிப்படையாக கூறினார். அதுமட்டுமில்லாமல் வீரம் திரைப்படத்தின் பொழுது அஜித்துடன் நான்கு மணி நேரம் பேசியதாகவும் அதில் பல சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொண்டதாகவும் கூறியுள்ளார்.

நடிகர் பிரேம் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம் மொழிகயிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர் சிறு வயதிலேயே திருமணம் செய்து கொண்டார், இவரின் இரண்டு மகன்களில் ஒருவர் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சத்யராஜ் மற்றும் ரம்பா நடிப்பில் வெளி ஆகிய குங்குமப்பொட்டு கவுண்டர் என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக பிரேம் நடித்துள்ளார்.

மேலும் நடிகர் பிரேம் மாதவனுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா திரைப்படம் செம ஹிட்டடித்தது. அதுமட்டுமில்லாமல் அந்தத் திரைப்படத்தில் பிரேமின் கதாபாத்திரம் மக்களால் பாராட்டப்பட்டது. நடிகர் ஜெய்யும் விஜயின் சர்க்கார் திரை படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

தற்பொழுது புதிதாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார், அதுவும் கே ஜி எஃப் வில்லன் நடிகர் சஞ்சய்தத் கெட்டப்பில் பலமாக இருக்கும் சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

prem
prem