2018 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகிய திரைப்படம் தான் கேஜிஎப் இந்த திரைப்படம் இந்தியா முழுவதும் வெளியாகி வசூலில் மிகப்பெரிய சாதனை படைத்தது இந்த திரைப்படத்தில் கன்னட நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு காலகட்டத்தில் கன்னட சினிமா என்றால் வெறுக்கும் அளவிற்கு இருந்தது ஆனால் கன்னட சினிமாவையே தூக்கி நிறுத்திய திரைப்படம் என்றும் கேஜிஎப் திரைப்படத்தை கூறலாம்.
கே ஜி எஃப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி யாஷ் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை பிரசாந்த் நீல் என்பவர் தான் இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது அதனால் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு படக்குழு முடிவு செய்தார்கள் அதனால் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுத்து முடித்து உள்ளார்கள். இந்த திரைப்படத்தை இந்திய முழுவதும் பல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் ஏனென்றால் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று மாபெரும் வெற்றி பெற்றது அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் அதிக எதிர்பார்ப்புடன் கதையை முடித்து இருப்பார்கள்.
அதனால் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இந்த இரண்டாம் பாகத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் ரவீனா டாண்டன், ரமேஷ் ராவ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். கேஜிஎப் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா முழுவதும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் இதுவும் ஒன்று இந்த திரைப்படம் ஜூலை 21-ஆம் தேதி வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள் ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகும் என தெரிகிறது கொரோனா பாதிப்பால் தடைப்பட்டிருந்த இந்த திரைப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் தான் தொடங்கியது முதல் பாகத்தை விட பல மடங்கு கேஜிஎஃப் இரண்டாம் பாகம் செம மாஸ் ஆக இருக்கும் என படத்தின் ஸ்டண்ட் இயக்குனர் அன்பறிவு கூறியுள்ளார்.
மேலும் படத்தின் அனைத்து வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இருக்கின்றன அதனால் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிகிறது.