2018 ஆம் ஆண்டு கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கேஜிஎப் இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது. மேலும் பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார் முதல் பாகம் வெற்றியடைந்ததை அடுத்து இரண்டாவது பாகத்தையும் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளது படக்குழு.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது. இந்த திரைப்படம் கொரோனா காரணமாக நீண்ட காலம் முடங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் KGF -2 ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் ரிலீசாக இருக்கிறது.
படத்தின் ரிலீஸ்க்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கின்ற நிலையில் இதன் பிரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் டிரைலர் ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.
அதிரடி ஆக்ஷன் கலந்து மாஸ் வசனங்களுடன் வெளியாகிய இந்த ட்ரெய்லர் அனைத்து மொழிகளிலும் வெளியிடப்பட்டது இந்த டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது இந்த நிலையில் கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டிரைலர் புதிய சாதனை படைத்துள்ளது. ட்ரெய்லர் வெளியாகி 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 109 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக ஹிந்தியில் 51 மில்லியன் தெலுங்கில் 20 மில்லியன் கன்னடத்தில் 18 மில்லியன் தமிழில் 12 மில்லியன் மலையாளத்தில் 8 மில்லியன் என 109 மில்லியன் பார்வையாளர்களை பெற்று பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் ஒரே நாளில் அதிக பார்வையாளர்களை பெற்ற ட்ரைலராக ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகி rrr திரைப்படத்தின் டிரைலர் ஐம்பத்தி ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்திருந்தது.
தற்போது அந்த சாதனையை கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டிரைலர் முறியடித்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளது.