கேஜிஎப் 2 டீசர் ரிலீஸ் தேதியுடன் வெளியாகிய புதிய போஸ்டர்.! ராஜா போல் கெத்தாக இருக்கும் யாஷ்

kgf-2-teaser

2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம்தான் கேஜிஎப் இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி,  ஆனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ்,  ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள்.

இந்த திரைப்படம் வெளியாகி கன்னட சினிமாவையே ஒட்டுமொத்த இந்தியாவும் திரும்பிப் பார்க்கும் படி அமைந்தது, இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி அடைந்ததால் இதன் இரண்டாம் பாகத்தை இயக்கி முடித்துள்ளார்கள். முதல் பாகத்தில் யாஷ் கோளாறின் தங்கசுரங்கம் இடத்திற்கு பயணம் சென்று அங்கு தான் கிங் என நிரூபிப்பார்.

இந்த நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார்கள் படக்குழு அதனால் எப்படி இருக்கும் என அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் ஏற்கனவே புகைப்படத்தின் மூலம் அறிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் கே ஜி எஃப் 2 படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களின் காத்திருப்பிற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

KGF இரண்டாம் பாகத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அதிரடியாக புதிய போஸ்டரின் மூலம் வெளியிட்டுள்ளது படக்குழு,  அந்த போஸ்டர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி 10.18-க்கு வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இந்த டீசரின் அறிவிப்புக்கே புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்க வைத்துள்ளது ஏனென்றால் இந்த புதிய போஸ்டரில் மிகவும் கெத்தாக யாஷ் அமர்ந்துள்ளார்.

மேலும் பிரசாந்த் நீள் அடுத்ததாக பிரபாஸை வைத்து சாலர் என்ற திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

kgf2-teaser-date-tamil360newz
kgf2-teaser-date-tamil360newz