என் மகனின் கதையை திருடி தான் “கேஜிஎப் 2″திரைப்படத்தை எடுத்தார்கள் என்று குற்றம் சாட்டிய பெண்.! அதிர்ச்சியில் படக்குழுவினர்..

kgf movie 1
kgf movie 1

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ள திரைப்படம்தான் கே ஜி எஃப் 2. இந்த திரைப்படம் தமிழ் திரைப்படமாக இல்லை என்றாலும் தமிழ் ரசிகர்கள் தங்களது நல்ல ஆதரவை அளித்திருந்தார்கள் இத்திரைப்படத்தில் யாஷ் ஹீரோவாக நடித்திருந்த நிலையில் காதல், சண்டை, வீரம் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இத்திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகிறது இதுவரையிலும் இத்திரைப்படம் ரூபாய் 70 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இத்திரைப்படத்தில் தங்க சுரங்கத்தில் அடிமையாக வேலை செய்யும் மக்களை எப்படி மீட்டு அவர்களுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்து தர தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்கிறார் ஹீரோ என்பதே கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் கதை.

இவ்வாறு இத்திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று ரசிகர்கள் மத்தியிலும் திரை பிரபலங்களும் பாராட்டி வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று ஒரு பெண் இது எனது மகனின் கதை என்று கூறி குற்றச்சாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

kgf movie
kgf movie

அந்தப் பெண் கூறியதாவது எனது மகன் கேஜிஎப் தங்க சுரங்கத்தில் வேலை பார்த்ததாகவும் அப்போது தங்க சுரங்கத்தில் இருந்து நகைகளை திருடி ஏழை மக்களுக்கு உதவி செய்ததால் போலீசாரால் கைது செய்யப்பட்டு 1996 ஆம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்டார் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் எனது மகனின் கதையை எனது அனுமதி இல்லாமல் படக்குழுவினர்கள் படமெடுத்து உள்ளதாகவும், எனது மகனை கெட்டவனாக சித்தரித்து உள்ளார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு திடீரென்று அந்தப் பெண்மணி கூறிய இந்த தகவல் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது