கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் முதன்முதலில் கன்னடத்தில் உருவான படம்தான் கேஜிஎப்,இப்படம் அதன் பிறகு பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது முக்கியமாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு தமிழ்நாட்டில் ஒளிபரப்பப்பட்டது.
கேஜிஎஃப் பாகம் 1 வெளியாகி தமிழ்நாட்டில் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது, இப்படம் வந்த காலகட்டத்தில் பட்டிதொட்டியெங்கும் சிறு குழந்தைகள் முதல் அனைவராலும் அறியப்பட்ட ஒரு படம், அதன் பிறகு கொரோனா காரணத்தினால் இப்படத்தின் பாகம்-2 வெளியிடப்படும் நாள் தள்ளி சென்றது.
அதன்பிறகு சமீபத்தில் ஏப்ரல் 14ஆம் நாள் வெளியான கேஜிஎப் பாகம் 2ம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது, படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளிலும் மக்களை மெய்சிலிர்க்க வைத்தது. படம் நன்றாக சென்று கொண்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தில் கதாநாயகனான யாஷின் அம்மாவாக நடித்த அர்ச்சனா என்பவர் தமிழ் திரையுலகில் முன்பே காலடி வைத்துள்ளார்என்பது தெரியவந்துள்ளது, இது தெரிந்ததும் அனைவரும் ஆச்சரியமடைந்தனர்,
இவர் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் நிலையிலிருந்த “சுப்புலட்சுமி” என்னும் நாடக தொடரில் நடித்து இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஏதோ சில காரணங்களால் இந்த நாடகம் ஒளிபரப்பப்படவில்லை.இவர் ஒரு கதக் நடன கலைஞர் ஆவார் மேலும் ஸ்ரேயாஸ் உடுப்பா என்பவருடன் தன் திருமண வாழ்க்கையை தொடர்ந்துள்ளார், அர்ச்சனாவின் வயது 27 ஆகும்.
கன்னட திரையுலகில் அனைவராலும் அறியப்பட்ட அர்ச்சனா கேஜிஎஃப் படத்தின் மூலம்தான் தமிழ்நாட்டில் மிக பிரபலம் அடைந்தார், மேலும் கேஜிஎஃப்-ல் கதாநாயகியாக நடித்த “ஸ்ரீநிதி செட்டி” தனது அழகினாலும் அருமையான நடிப்பினாலும் தனக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார், மேலும் கேஜிஎஃப் பாகம்-3 ற்க்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.