பீஸ்ட் பற்றி குறை சொல்லுபவர்கள் கேஜிஎப் திரைப்படத்தில் இந்த லாஜிக் மீறல்களை கவனித்தீர்களா நெட்டிசன்கள் கேள்வி.!

beast-kgf-2
beast-kgf-2

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் கேஜி எஃப் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் உலகம் அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த கேஜிஎப் சாப்டர் 1  பாகத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது அதனால் என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என நினைத்து இரண்டாவது பாகத்தில் சில லாஜிக் மீறல்களை செய்துள்ளார்கள் படக்குழு.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது பாகம் வெளியாகி உள்ளது இந்த திரைப்படத்தையும் பிரசாந்த் நீல் தான் இயக்கியுள்ளார் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள இரண்டாவது பாகத்தில் பல லாஜிக் மீறல்கள் இருக்கிறது என நெட்டிசன்கள் சுட்டிக் காட்டி வருகிறார்கள். அதற்கு காரணம் கேஜிஎப் திரைப்படத்திற்கு முதல் நாள் வந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றது தான் என் என்றால் தமிழ் படத்தையே இப்படி சொல்லுகிறார்களே கனட டப்பிங் படத்தை சொல்லமாட்டார்களா என்ன.

அதுமட்டுமில்லாமல் இதெல்லாம் எப்படி சாத்தியம் என பீஸ்ட்   திரைப்படத்தை பங்கமாய் கலைத்தார்கள். இந்த நிலையில் அடுத்த நாள் வந்த கே ஜி எஃப் திரைப்படத்தில் உள்ள லாஜிக் மீறல்களை கண்டுபிடித்து சுட்டிக்காட்டி நீங்கள் எல்லாம் எப்படி பீஸ்ட் திரைப்படத்தை பற்றி பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள் நெட்டிசன்கள்.

அந்தவகையில் கேஜிஎப் திரைப்படத்தில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் KGF திரைப்படத்தை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். தற்பொழுது KGF படத்தில்  லாஜிக் மீறல்களை சுட்டிக் காட்டியுள்ளார்கள் அதில் ஒரு காட்சியில் ஹீரோயின் ஹீரோ உடன் கரண்ட் இல்லை என்று கூறுவாராம் அதற்கு ஹீரோ ஒரு ஹெலிகாப்டரை கொண்டு வந்து மாடியில் நிறுத்தி விடுவாராம்.

இதை மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என படக்குழு கொஞ்சம் கூட யோசிக்காமல் இந்த காட்சியை வைத்துள்ளார்கள்.  இதெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் ஹீரோ பிரதமர் அலுவலகத்திற்கு சென்று அவரை அடிக்க செய்வாராம் அதுமட்டுமில்லாமல் பார்லிமென்டில் சென்று அனைவரையும் சுட்டுக் வீழ்த்துவாரம் ஹீரோ. அந்த இடத்தில் ஒரு மந்திரி கூட இல்லாமல் அனைவரும் இறந்து விடுவார்களாம் இப்படி அனல் பறக்க எடுக்கப்பட்ட இந்த சண்டைக் காட்சியில் ஹீரோ கூலிங்கிளாஸ் கண்ணாடியை கழட்டாமல் மேலே பறந்து பறந்து சண்டை போடுகிறார்.

கூலிங்கிளாஸ் சண்டை போடும் போதும் கீழே விழாதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இந்த படம் முழுவதும் பில்டப்பும் பிரமாண்டமும் தான் இருக்கிறது அதை தவிர வேறு எதுவுமே கிடையாது. பிரம்மாண்டமான திரைப்படம் என்பதால் பிரமாண்டத்தை மட்டும் காட்டிவிட்டு சின்ன சின்ன லாஜிக் மீறல்களை படக்குழு மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என அப்படியே வைத்து விட்டார்கள் போல.

இதையெல்லாம் நம்புவதற்கு நாங்கள் என்ன முட்டாள்களா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சில லாஜிக் இல்லாமல் இருந்தது உண்மைதான் ஆனால் அதைவிட கேஜிஎப் திரைப்படத்தில் அதிக லாஜிக் மீறல்கள் இருக்கிறது எனவும் கூறி வருகிறார்கள். பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சில காட்சிகள்தான் லாஜிக் மீறல் ஆனால் கேஜிஎப் திரைப்படத்தில் பல காட்சிகளில் லாஜிக் இல்லாமல் இருக்கிறது ஆனால் கேஜிஎப் திரைப்படத்தை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வருகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணம் விஜயின் வளர்ச்சி பிடிக்காததால் இதுபோல் செய்து வருகிறார்கள் ஒரு சிலர் என பலரும் குற்றம் சாட்டி வருகிறார்கள்.