நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகிய திரைப்படம்தான் பீஸ்ட் இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற வருகிறது அதேபோல் இந்த திரைப்படம் தமிழகத்தில் 800க்கும் மேற்பட்ட திரையரங்கில் திரையிடப்பட்டது. ஆங்காங்கே விஜய் ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தை திருவிழா போல் கொண்டாடினார்கள்.
இந்த நிலையில் இன்று பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் கேஜிஎப் இரண்டாம் பாகம் இதற்கு முன் வெளியாகிய முதல்பாகம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் எப்போது வரும் என பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த நிலையில் இன்று கேஜிஎப் -2 திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பல ரசிகர்கள் படம் மிரட்டலாக இருக்கிறது எனவும். பீஸ்ட் திரைப்படத்தை இன்னும் ஒரு மாதத்திற்கு தள்ளி வைத்து இருக்கலாம் என விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஏனென்றால் KGF 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதேபோல் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது இந்த நிலையில் முதல் நாள் பல கோடி வசூல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் நேற்று வெளியானது.
அதனால் கேஜி இரண்டாவது பாகத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. கேஜிஎப் திரைப்படத்திற்கு வெறும் 250 திரையரங்குகளே கிடைத்திருந்த நிலையில் தற்பொழுது நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது பலரும் KGF 2 திரைப்படத்தை பார்க்க ஆசைப்பட்டுள்ளார்கள் அதனால் தமிழகத்தில் 350 திரையரங்குகள் வரை தற்பொழுது கேஜிஎப் திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் KGF படத்தின் காட்சிகளை அதிகரிக்கவும் செய்துள்ளார்களாம். போற போக்கை பார்த்தால் பீஸ்ட் திரைப்படம் பெரும் கேள்விக்குறியாக மாறும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.