கன்னட சினிமாவில் பிரசாந் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாக்கிய திரைப்படம் கேஜிஎப் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக வெற்றி பெற்றது இதனை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக கேஜிஃஎப் இரண்டாவது பாகத்தை எடுத்து வந்தார்கள்.
இந்த இரண்டாவது பாகத்தையும் பிரசாந்த் நீல் தான் இயக்கியிருந்தார் அதுமட்டுமில்லாமல் யாஷ் நடிப்பில் உருவாகிய இந்த திரைப்படத்தில் ஸ்ரீநிதி செட்டி யாஷ்க்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த இரண்டாவது பாகமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது அது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாக மிகவும் பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.
அதேபோல் கேஜிஎப் இரண்டாவது பாகம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது அதிலும் kgf இரண்டாவது பாகம் ஹிந்தியில் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் வெற்றி நடை போட்டு வருகிறது அந்தவகையில் பதினொரு நாள் ஹிந்தியில் வெளியாகிய கேஜிஎப் திரைப்படம் இதுவரை 300 கோடி ரூபாய் வரை வசூலித்தது.
இதனை ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகிறார்கள் அது மட்டுமில்லாமல் ஒரு தென்னிந்திய திரைப்படம் இந்தியில் இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியுள்ளது ஹிந்தி சினிமா வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தியில் இரண்டாவது நாளில் 100 கோடியும், நான்காவது நாளில் 150 கோடியும், ஆறாவது நாளில் 225 கோடி, ஒன்பதாவது நாளில் 225 கோடி, பதினோராவது நாளில் 300 கோடியை தொட்டு புதிய மைல்கல்லை தொடர்ந்துள்ளது.