ஏப்ரல் 14ஆம் தேதி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கேஜிஎப் இரண்டாவது பாகம் திரையரங்கிற்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தில் பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்துள்ளார் கன்னட சினிமா ஒரு காலத்தில் பின்தங்கியிருந்த நிலையில் அதை உலக சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர் யாஸ்.
இந்த நிலையில் யாஷ் நடித்திருக்கும் கேஜிஎப் இரண்டாவது பாகம் திரைக்கு வர இருப்பதால் படத்தின் புரமோஷன் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டூஃபான் என்ற பாடலை படக் குழு வெளியிட்டுள்ளது இந்த பாடல் ரசிகர்களிடம் மிக வேகமாக வைரலாகி வருகிறது.
அதேபோல் இந்தப் பாடலின் இடையில் சில வசனங்கள் வருகின்றன அது அவன் கத்தி வீசுற வேகத்தில் புயல் உருவாகிறது எனவும் நீங்க மட்டும் அவன் குறுக்கே போயிடாதீங்க சார் என்ற வசனமும் இடம்பெற்றுள்ளது. இந்த வசனங்கள் அனைத்தும் இளசுகளின் நரம்புகளை முருகேடுக்கும் வகையில் இருக்கிறது.
மேலும் கேஜிஎப் திரைப்படத்தில் யாஷ் ஸ்ரீநிதி செட்டி, சஞ்சய் தத், ரவீனா டண்டான், பிரகாஷ்ராஜ் ,மாளவிகா அபினாஷ், ஈஸ்வரி ராவ், ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் இயக்கிய இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளதே இதற்கு காரணம் இதன் முதல் பாகம் யாரும் எதிர்பார்க்காத வகையில் வெற்றியைப் பெற்றதால்.
இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது அந்த அளவு கதையை செதுக்கி வைத்து உள்ளார்கள். தற்பொழுது இந்த பாடல் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.இந்த பாடல் தமிழ், தெலுங்கு ,கன்னடம்,ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.