வசூலில் பாலிவுட் திரைப்படங்கலையே ஓரங்கட்டும் கேஜிஎப்.! அடுத்த சாதனை இதோ.

kgf 2

கன்னட சினிமாவில் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது கேஜிஎப் இதன் முதல் பாகத்தை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார் இந்த நிலையில் முதல் பாகம் வெளியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது இந்த நிலையில் இந்த திரைப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு படக்குழு முடிவு செய்தது.

இந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி உலகம் முழுவதும் kgf  இரண்டாவது பாகம் வெளியானது அதேபோல் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, என மூன்று மொழிகளில் வெளியானது.

தமிழில் விஜய் இன் பீஸ்ட் திரைப்படத்துடன் கேஜிஎப் திரைப்படம் மோதியது ஆனாலும் ரசிகர்களிடம் KGF  நல்ல விமர்சனங்களைப் பெற்றது.அதேபோல் பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சங்களை பெற்றது இந்த நிலையில் KGF திரைப்படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.

படம் வெளியாகி 12 நாட்களுக்குள் 700 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது இந்த நிலையில் தற்பொழுது பல தமிழ் திரைப்படங்கள் வெளியானாலும் இன்னும் 360 திரையரங்குகளில் மேல்  கேஜிஎப் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கேஜிஎப் திரைப்படம் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் இதுவரை வெளியாகிய தங்கள் பாகுபலி இரண்டாவது பாகம் மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்தது இந்தநிலையில் நான்காவது திரைப்படமான கேஜிஎப் இரண்டாவது பாகம் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஆயிரம் கோடி கிளப்பில் தமிழ் திரைப்படமும் இணைய வேண்டும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கிறார்கள் இந்நிலையில் மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

KGF
KGF