ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதி வெளியாகிய திரைப்படம் தான் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் இரண்டாவது பாகம். இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது கேஜிஎப் திரைப்படம் நல்ல வசூலையும் பீஸ்ட் திரைப்படம் வசூலில் தடுமாறி வருகிறது. தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் 800 திரையரங்குகளுக்கு மேல் வெளியானது அதேபோல் கேஜிஎப் திரைப்படம் 250 திரையரங்குகள் தான் கிடைத்தது ஆனால் போகப்போக பீஸ்ட் திரைப்படத்தை விட கேஜிஎப் திரைப்படம் அதிக திரையரங்குகளை பிடித்துள்ளது.
ஆரம்பத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் பீஸ்ட் திரைப்படத்தை மிகப் பெரிய திரைப்படமாக் எதிர்பார்ப்பில் இருந்து வந்தார்கள் நடிகர் விஜய் படம் என்பதால் கண்மூடித்தனமாக சினிமா ரசிகர்கள் பலரும் பிரமாண்டமாக இருக்கும் என எதிர்பார்த்தார்கள் ஆனால் நடந்ததோ வேறு விஜய் இயக்குனர் நெல்சன் சொன்னதை சரியாக செய்துள்ளனர் ஆனால் கதையில் தான் மிகப்பெரிய சொதப்பல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
படத்தை பார்த்து விஜய் ரசிகர்கள் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறார்கள் என்றால் விஜய்க்கு இது போல் ஒரு கதையா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள் மேலும் பீஸ்ட் திரைப்படம் வெளியாகி சென்னையில் 10 கோடி வசூல் செய்யவே பல நாட்கள் ஆகி விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் வரவர டல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று வெறும் 1.5 கோடி தான் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் இதுவரை 192 கோடிகள் மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் வெளியாகிய கேஜிஎப் திரைப்படம் பீஸ்ட் திரைப்படத்தை தூக்கி சாப்பிட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த நிலையில் 250 திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது இந்த நிலையில் இந்த திரைப்படம் கூடுதலாக 60 திரையரங்குகளில் கிடைக்கப் பெற்று அதிக திரையரங்குகளில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்த திரைப்படம் இதுவரை 750 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் கேஜிஎப் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.