சமீபத்தில் வெளியாகிய கேஜிஎப் இரண்டாவது பாகம் திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக இருப்பதாகவும் வசூலில் மிகப்பெரிய வசூலை ஈட்டி உள்ளதாகவும் பலரும் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவில் இரண்டாவது பாகம் RRR புஷ்பா ஆகிய திரைப்படங்களை போல் எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை என இயக்குனர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.
தமிழில் மிகப் பெரிய திறமையான இயக்குனர்கள் இல்லை எனவும் பெரிய ஹீரோக்களின் படங்கள் பிளாப் ஆவதற்கு காரணம் இயக்குனர்கள் தான் எனவும் கூறுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இயக்குனர்கள் விஷயத்தில் நடிகர்கள் தலையிடுவதால் தான் படம் பிளாப் ஆகிறது எனவும் பல வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்தார்கள்.
கன்னட திரைப்படமான KGF இரண்டாவது பாகம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானது. கடந்த ஏப்ரல் 14ம் தேதி பத்தாயிரம் திரையரங்குகளுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்டது. தற்பொழுது வரை 700 கோடி வசூல் செய்து அடுத்ததாக ஆயிரம் கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒரு மான்ஸ்டர் பற்றிய கதை இவ்வளவு பிரம்மாண்ட வசூல் சாதனை படைக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் அந்த அளவில் மிகப்பெரிய வசூலை ஈட்டி வருகிறது.
இந்த நிலையில் இயக்குனர் மணிரத்தினம் மற்ற மொழி திரைப்படங்களின் வெற்றியைப் பார்த்து தமிழ் படங்கள் பயப்பட தேவை இல்லை தமிழ் திறமையான நிறைய இயக்குனர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இதைவிட பிரமாண்ட படத்தை இயக்குவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் கேஜிஎப் இரண்டாவது பாகத்தில் பழைய தமிழ் சினிமாக்களின் ரெஸ்பான்ஸ் கள் அதிகமாக இருப்பதாக ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் விஜய் நடித்த குருவி அஜித் நடித்த பில்லா இரண்டாவது பாகம் ஆகிய திரைப்படங்களில் ரெஸ்பான்ஸ் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் KGF இரண்டாவது பாகம் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படத்தின் காப்பி என ஒரு விஷயத்தை கிளப்பி விட்டுள்ளார்கள். அஞ்சான் திரைப்படத்தில் சூர்யாவின் பெயர் ராஜு பாய் அதேபோல் kgf இரண்டாவது பாகத்தில் யாஷ் பெயர் ராக்கி பாய் இரு படங்களுமே ஹீரோ சாதாரணமாக இருந்து பெரிய கேங்ஸ்டராக வளர்ந்திருப்பார்கள். அதேபோல் இரண்டு திரைப்படத்திலும் ஹீரோ ஹீரோயினை கடத்தி வைத்திருப்பார். மேலும் ஹீரோவின் நற்செயல்களைப் பார்த்து ஹீரோயின் காதலிப்பார்கள் அதேபோல் இரண்டு திரைப்படத்திலும் இருக்கிறது.
மேலும் இரண்டு திரைப்படத்திலும் தொப்பி வைத்த முஸ்லிம் பாய் இடம் பெற்றிருக்கிறார் அதுமட்டுமில்லாமல் சம்பந்தமே இல்லாமல் ஒரு எழுத்தாளர் பத்திரிக்கையாளர் டைரக்டர் 2 திரைப்படங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு படங்களிலும் ஹீரோ கடலில் மூழ்குவதை காட்டியுள்ளார்கள்.
இப்படி ஒவ்வொரு காட்சியையும் ஒப்பிட்டு பார்த்து அஞ்சான் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பிதான் கேஜிஎப் இரண்டாவது பாகம என பலரும் கிண்டலடித்த வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் கதையை சுட்டு அதை கொஞ்சம் மாற்றி இப்பொழுது பிளாக்பஸ்டர் படமாக்கி இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அப்படியென்றால் kgf திரைப்படத்தை நம்ப ஆளுங்க எப்போது எடுத்துட்டாங்க எல்லாமே ஒன்றாக தான் உள்ளது ஆனால் சூர்யா படத்தில் வில்லன் சரியில்லை கேஜிஎப் படத்தில் வில்லனாக மிரட்டியதால் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது என கூறி வருகிறார்கள்.