கன்னட சினிமாவை தூக்கி நிறுத்தியவர் பிரசாந்த் நீல் இவர் யாஷ் அவர்களை வைத்து கேஜிஎப் திரைப்படத்தை இயக்கினார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்து வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த நிலையில் கேஜிஎப் 2 திரைப்படத்தை படக்குழு எடுக்க ஆரம்பித்தார்கள் தற்போது இந்த திரைப்படம் முடிவடைந்த நிலையில் நாளை உலகம் முழுவதும் கே ஜி எஃப் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது ஏனென்றால் முதல் பாகம் வேற லெவலில் இருந்ததால் இரண்டாம் பாகம் அதைவிட கொல மாஸாக இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.மேலும் சமீபத்தில் டிரைலர் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது.
இந்த ட்ரெய்லரை எடிட் செய்தவர் உஜ்வால் தான் இவர் இதற்கு முன் சில குறும்படங்களை எடிட் செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இவர் சில திரைப்படங்களின் ரசிகர் எடிட்டராகவும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார் அப்படி இவர் எடிட் செய்த வீடியோவை பிரசாந்தின் மனைவி பார்த்து விட்டு ஆச்சரியப்பட்டு உள்ளார் அதனை தன்னுடைய கணவர் பிரசாந்த் நீல் அவர்களுக்கு கூறினார்.
உடனே பிரசாந்த் அந்த வீடியோக்களை பார்த்து தன்னுடைய இரண்டாம் பாகத்தின் மொத்த எடிட்டிங் பொறுப்பையும் கொடுத்தார். மேலும் இயக்குனருடன் கடந்த 3 ஆண்டுகளாக நன்றாக பயிற்சி செய்த பிறகு தான் அவர் எடிட்டராக உருவாகி உள்ளார்.
இதனை சமீபத்தில் கேஜிஎஃப் திரைப்படத்தின் நாயகன் யாஷ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். நாளை படம் வெளியானதும் உஜ்வால் அவர்களுக்கு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை வெறும் 19 வயதிலேயே மாஸ் திரைப்படத்தை எடிட் செய்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.