விஜயின் கோட்டைகளை ஒவ்வொன்றாக கைபற்றும் ராக்கி பாய்.! இப்போ எங்கு தெரியுமா.? மாஸ் காட்டும் KGF 2.

kgf
kgf

தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் எல்லாம் முக்கிய நாள் என்றால் எப்பொழுதும் டாப் நடிகர்களின் படங்கள் மோதுவது வழக்கம். ஆனால் அண்மைகாலமாக டாப் நடிகர்கள் படங்கள் சோலோவாக வெளிவந்து அசத்துகின்றன இதற்கு காரணமும் முக்கிய நாட்களில் படங்களில் மோதுவதால் தயாரிப்பாளருக்கு சரியான லாபம் கிடைக்காமல் போய் விடுகிறது.

ஆனால் தனியாக ஒரு படம் இறங்கினால் படத்தின் பட்ஜெட்டையும் தாண்டி லாபம் பார்க்கும் இதனால் அண்மை காலமாக இப்படித்தான் தனியாக படங்கள் வெளிவருகின்றன இப்படி இருந்த நிலையில் தளபதி விஜயின் பீஸ்ட் 13ம் தேதி வெளியானது.  அடுத்த நாளே நடிகர் யாஷின் KGF 2 படம் வெளியாகி நான் இதன் மூலம் இரண்டு படங்களும் பெரிய அளவில் மோதின.

பீஸ்ட் படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும், வசூலில் அடித்து நொறுக்கியது ஆனால் அதன் பின் வெளிவந்த கே ஜி எஃப் 2 திரைப்படம் விமர்சனத்திலும் சரி , வசூலிலும் சரி எந்த குறையும் வைக்காமல் அடித்து நொறுக்குகிறது. இதுவரை கே ஜி எஃப் 2 திரைப்படம் 900 கோடிக்கு மேல் வசூல் செய்து ஓடிக்கொண்டிருக்கிறது.

பீஸ்ட் திரைப்படம் 150 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடதக்கது இப்படி இருக்கின்ற நிலையில் விஜயின் கோட்டையாக கருதப்படும் தமிழ், கேரளா ஆகிய இடங்களில் கே ஜி எஃப் 2 திரைப்படம் ஏற்கனவே நல்ல வரவேற்ப்பை பெற்று அசத்தியது. இந்த நிலையில் விஜய்யின் மற்றொரு இடமான மலேசியாவிலும் தற்போது கே ஜி எஃப் 2 திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்று அங்கு தனது ராஜ்ஜியத்தை நடத்தி வருகிறது.

மலேசியாவில் கேஜிஎப் 2 படம் அங்கு உள்ள கரன்சி விவரப்படி 8 மில்லியன் பெற்றுள்ளது. விஜய்யின் பீஸ்ட் 6.2 மில்லியன் தான் பெற்றுள்ளது இதை வைத்து பார்க்கும் போதே தெரிகிறது கேஜிஎஃப் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இப்படி விஜயின் முக்கிய இடங்களில் கேஜிஎப் 2 செம மாஸ் காட்டி வருகிறது.