மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் மலையாளத்திலிருந்து வரும் நடிகைகள் தமிழில் கொடி கட்டி பறக்கிறார்கள் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஒருவர் இவர் தற்பொழுது அரை டஜன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் என பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது தமிழில் உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 29ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தை மாரி செல்வராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிகர் வடிவேலு இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மாமன்னன் திரைப்படத்தை தொடர்ந்து ஜெயம் ரவிக்கு ஜோடியாக சைரன் என்ற திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் ரிவால்வர் ரீட்டா, ரகு தாதா ஆகிய திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். மேலும் தெலுங்கில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் சிரஞ்சீவி அவர்களுடன் நடிக்க இருக்கிறாராம். இந்த திரைப்படம் தமிழில் ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியாகிய வேதாளம் திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் என தகவல் கிடைத்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில் மிகவும் பிஸியாக நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி ஏதாவது ஒரு கிசுகிசுவில் சிக்கி விடுகிறார். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு வருவார்.
இதற்கு முன்பு அனிருத் அவர்களுடன் காதல் என கிசுகிசு வெளியாகியது ஆனால் இருவரும் நல்ல நண்பர்கள் என விளக்கம் அளித்த பின்னரே அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது மேலும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் துபாயில் தன்னுடைய நண்பர் ஒருவருடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டதால் இவரை தான் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அவரின் தந்தை அதனை திட்டவட்டமாக மறுத்தார் அப்படி இருக்கும் நிலையில் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.