தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கீர்த்தி சுரேஷ் இவர் முதன் முதலாக சினிமாவுலகில் பைலட் என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் அதன் பிறகு ஒரு சில குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படத்தில் நடித்து வந்தார் பின்பு 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு தமிழ் சினிமாவில் முதன்முதலாக 2015 ஆம் ஆண்டு இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் மாயா என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது இதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.
மேலும் கீர்த்தி சுரேஷ் பைரவா, தொடரி, ரெமோ, தானா சேர்ந்த கூட்டம், ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார். அதன் பிறகு அண்ணாத்த, சண்டக்கோழி 2 என பல திரைப்படங்களில் நடித்து வந்தார் முதன்முறையாக ஹீரோயின்க்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படம் ஆன சாணி காகிதம் என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
தற்பொழுது இவர் கைவசம் மாமன்னன் என்ற ஒரு தமிழ் திரைப்படம் மட்டுமே இருக்கிறது அதேபோல் தெலுங்கில் இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் பெரிதாக பட வாய்ப்பு கிடைக்காததால் பட வாய்ப்பு விரைவில் அடைய வேண்டும் என்பதற்காக பல நடிகைகள் செய்யும் யுத்தியை இவரும் கடைப்பிடித்து வருகிறார்.
நடிகைகள் பட வாய்ப்புக்காக கிளாமர் போட்டோ சூட்டை நடத்துவார்கள் அதனை சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள் அதனால் கீர்த்தி சுரேஷ் இதுவரை குடும்ப பங்கான உடையை அணிந்து தான் போட்டோ சூட் நடத்தியுள்ளார். ஆனால் சமீப காலமாக கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் அதிகரித்து வருகிறார்.
கிளாமர் கொஞ்சம் தூக்கலாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டும் இல்லாமல் இதை பார்த்த ரசிகர்கள் போதுண்டா சாமி பார்க்க முடியல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.