விஜயசாந்தியாக மாறிய கீர்த்தி சுரேஷ்.. பிறந்தநாள் கிப்டாக வெளியான ரிவால்வர் ரீட்டா டீசர்

கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய 32 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அதேபோல் அவருடைய நடிப்பில் உருவாகி வரும் ரிவால்வர் ரீட்டா பட குழுவும் டீசரை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. அதன்படி டீசரில் கீர்த்தி சுரேஷ் விஜய் சாந்தி ரேஞ்சுக்கு அமர்க்களம் செய்திருக்கிறார்.

இதன் ஆரம்பத்திலேயே திருடன் கீர்த்தியின் ஹேண்ட் பேக்கை திருடுவது போல் காட்டப்படுகிறது. அதன் பிறகு அந்த பைக்குள் என்ன இருக்கிறது என ரௌடிகள் பார்க்கின்றனர். அவர்களை அதிர வைக்கும் அளவுக்கு துப்பாக்கி, ரத்தம் படிந்த கத்தி, வெடிகுண்டு ஆகியவை இருக்கிறது.

இதை பார்த்து அவர்கள் மிரண்டு நிற்கும் நிலையில் கீர்த்தி சுரேஷின் இன்ட்ரோ அட்டகாசமாக காட்டப்படுகிறது. அதை அடுத்து ரவுடிகளை அவர் லெப்ட் ஹாண்டில் டீல் செய்கிறார்.. நீ யாரு என ரவுடிகள் கேட்க அடுத்தடுத்து அவருடைய அதிரடி காட்சிகள் காட்டப்படுகிறது.

இறுதியில் கீர்த்தியின் அம்மாவாக வரும் ராதிகா, தக்காளி வாங்கிட்டியா சீக்கிரம் வா என சொல்வதோடு டீசர் முடிகிறது. ஜேகே சந்துரு இயக்கி இருக்கும் இப்படத்தின் டீசரை பார்க்கும்போது கோலமாவு கோகிலா படம் நினைவுக்கு வருகிறது.

மேலும் சமீப காலமாக கதையின் நாயகியாக நடிப்பதை தான் கீர்த்தி விரும்புகிறார். அந்த வரிசையில் உருவாகி இருக்கும் ரிவால்வர் ரீட்டா அவருக்கு எந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகும் என்பது படம் வெளியானால்தான் தெரியும்.