எத சொல்றதா இருந்தாலும் ஓப்பனா சொல்லுங்க.. பிரபல இயக்குனரிடம் சொன்ன கீர்த்தி சுரேஷ்

keerthy-suresh
keerthy-suresh

தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை கீர்த்தி சுரேஷ் முதலில் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த இவர் தமிழில் “இது என்ன மாயம்” என்னும் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார். முதல் படத்திலேயே இவருடைய அழகு, திறமை பெரிய அளவில் பேசப்பட்டதை..

தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் குவிந்தது கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பிடித்தார் அன்றிலிருந்து இன்று வரை டாப் நடிகர்களுடன் நடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார் இப்பொழுது கூட மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான மாமன்னன் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார்.

இந்த படம் ஜூன் 29 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று மாமன்னன் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது படத்தில் உதயநிதி, கீர்த்தி சுரேஷுடன் இணைந்து பகத் பாசில், வடிவேலு, ரவீனா ரவி மற்றும் பலர் நடித்திருந்தனர் இவர்களுடன் சிறப்பாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் தொடர்ந்து நல்ல விமர்சனத்தை பெற்று வருவதால் வசூலிலும் அடித்து நொறுக்கிறது. இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மாமன்னன் பட இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது முதலில் மாரி செல்வராஜ் தன்னிடம் பேச தயங்கியதாகவும்..

உதய் சாரிடம் தான் பேசும்பொழுது கீர்த்தி எல்லாத்தையும் என்கிட்ட கேக்குறாரு உங்க கிட்ட பேச தயக்கப்படுகிறார்கள் என்று சொன்னதால் அவரிடமும் சென்று என்னத்தான் இருந்தாலும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியதாகவும் அதன் பின் தானே போய் அதையெல்லாம் உடைத்து தன்னிடம் சகஜமாக பேச வைத்ததாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.