keerthy suresh : தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிஸியான நடிகையாக ஓடுபவர் கீர்த்தி சுரேஷ். முதலில் மலையாளத்தில் நடித்து வந்த இவர் தமிழில் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான இது என்ன மாயம் படத்தில் நடித்து அறிமுகமானார் இந்த படம் சுமாரான வரவேற்பு பெற்று இருந்தாலும் கீர்த்தி சுரேஷின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழ் திரை உலகில் உச்ச நட்சத்திர நடிகர்களான விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை பெரிதாக்கி கொண்டார் இவர் நடிப்பில் தற்போது வெளியாகிய மாமன்னன் திரைப்படமும் வெற்றி பெற்றது இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு கீர்த்தி சுரேஷ் குறித்து பேசியது பெரும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவை பொருத்தவரை அழகும், அதிர்ஷ்டமும் கலந்த ஒரு நடிகை என்றால் அது கீர்த்தி சுரேஷ் தான். குறுகிய காலகட்டத்திலேயே டாப் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இவர் தமிழில் நடித்த முதல் படத்திலேயே தனது திறமையை காட்டி அசத்தினார். இருந்தாலும் கீர்த்தி சுரேஷுக்கு பக்கபலமாக அமைந்த படம் என்றால் அது மகாநடி தான்..
இந்த படத்திற்காக ஏகப்பட்ட நடிகைகளின் லிஸ்ட் கையில் இருந்தது இயக்குனர் தேர்வு செய்தது கீர்த்தி சுரேஷ் தான் அவரை தேர்ந்தெடுத்த போது பலரும் விமர்சித்தார்கள் இதெல்லாம் எப்படி நடிக்க போகுதுன்னு கிண்டலடித்தார்கள் ஆனால் அந்தப் படத்தில் தன் நடிப்பின் மூலம் சாவித்திரியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார் கீர்த்தி சுரேஷ் அந்த படத்திற்காக டெஸ்ட் ஷூட்டிங்லையே அவர் தான் திறமையை காட்டி இருந்தார்.
கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் எடையை குறைத்து பின்னர் அவர் இனிமே அவ்வளவுதான் என ஏளனம் செய்தார்கள் இதெல்லாம் ஒரு மூஞ்சியா அவருக்கு அவ்வளவுதான் மார்க்கெட் போச்சி என பேசினார்கள் அதெல்லாம் பார்க்கும் போது மிகவும் அசிங்கமாக இருந்தது அவர் எந்த படத்திற்காக ஒல்லினார் என தெரியவில்லை ஆனால் தற்பொழுது மீண்டும் பழைய நிலைமைக்கு வந்து மார்க்கெட்டை பிடித்து விட்டார் என கூறியுள்ளார்.