கொடி பறக்குதுல.. மாமன்னன் 50வது நாள் ஸ்பெஷலாக உதயநிதி பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த வீடியோவை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்

Udhaiyanidhi Stalin:  நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மாமன்னன் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலின் பைக் ஓட்ட கத்து கொடுத்து இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீப காலங்களாக இவருக்கு தமிழில் பெரிதாக பட வாய்ப்புகள் அமையாத காரணத்தினால் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக உள்ளார். உதயநிதியுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தினை மாரி செல்வராஜ் இயக்க உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாஸில் ஆகியோர்கள் இணைந்து நடித்திருந்தனர்.

மாமன்னன் படத்தின் 50வது நாள் வெற்றி விழா நேற்று மிகவும் கோலாகலமாக நடைபெற்ற முடிந்தது இந்த விழாவில் படப்பிடிப்பின் பொழுது ஏற்பட்ட அனுபவங்களை அனைவரும் பகிர்ந்து கொண்டனர். அதேபோல் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் குறித்த வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைதளத்தில் பகிர அது வைரலாகி வருகிறது. அதில் முக்கியமாக பைக் ஓட்ட கீர்த்தி சுரேஷ் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கற்றுத் தருகிறார்.

keerthi suresh
keerthi suresh

இவ்வாறு உதயநிதி சொல்வதை அனைத்தையும் கேட்டுக் கொண்டு சுரேஷ் மிகவும் சுலபமாக பைக் ஓட்டும் காட்சிகள், கார் ஓட்டும் காட்சிகள், டென்னிஸ் விளையாடும் காட்சிகள் ஆகியவை அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. ‘கொடி பறக்கும் 50-வது நாள் மாமன்னன்’ என்ற கேப்டன் உடன் கீர்த்தி சுரேஷ் வெளியிட இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இப்படி ஒரு வெற்றி திரைப்படத்தினை தந்ததே கிடையாது. அப்படி மாமன்னன் திரைப்படம் உதயநிதியின் கடைசி படமாக அமைந்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியினை தந்துள்ளது.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்..