திருமணத்திற்கு ரெடியாகும் கீர்த்தி சுரேஷ்.? எப்படிப்பட்ட மாப்பிள்ளை தெரியுமா..

keerthy-suresh-
keerthy-suresh-

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் கால் தடம் பதித்து பின் பருவ வயதை எட்டிய பிறகு சினிமா உலகில் ஹீரோயினாக கால் பதித்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தது அதிலும் குறிப்பாக டாப் நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டார் மேலும் தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தையும் தக்க வைத்து  கொண்டார்.

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் எவ்வளவு பட வாய்ப்பு அல்லுகிறாரோஅதே அளவிற்கு ரசிகர்களும் தனக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக அப்போ பொழுது நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு அசத்தவும் தொடங்கியுள்ளார்.

இப்படி இருந்தாலும் அண்மை காலமாக நடிகைகள் திடீரென திருமணம் செய்து கொண்டு அசத்துகின்றனர் அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பதை ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது அதே சமயம் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ளப் போவதாக பல தகவல்களும் வெளிவந்த வண்ணமே தான் இருக்கின்றன.

தற்போது கூட நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு ரெடியாகிவிட்டார் என்பதும் மாப்பிளை ஒரு தொழிலதிபர் மேலும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்றும் ஒரு தகவல் இணையதள பக்கத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது இதற்கான அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக வரும் என சொல்லப்படுகிறது. ஆனால் கீர்த்தி சுரேஷ் ஒரு குடும்ப மோதிரம் பற்றி இதுவரையிலும் வாய் திறக்காமலேயே இருந்து வருகின்றனர்.