சென்னை பெண்ணான கீர்த்தி சுரேஷ். குழந்தையாக இருக்கும் போது சினிமா உலகில் கால் தடம் பதித்து விட்டார். பருவ வயதை எட்டிய பிறகு ஹீரோயின்னாக நடிக்க தொடங்கினார் தமிழில் இது என்ன மாயம் என்னும் படத்தில் நடித்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் தேர்ந்தெடுத்து நடித்த படங்கள்..
ஒவ்வொன்றும் வெற்றி படங்களாக மாறின அதனால் இவர் தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோக்களாக இருக்கும் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் அந்த வகையில் விக்ரம், விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்றவர்களுடன் நடித்து தனது மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்டார் மேலும் இவருக்கும் ரசிகர்கள் கிடுகிடு என உருவாக்கினர்.
ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி இவர் தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பட வாய்ப்பு கைப்பற்றி ஓடினார். அப்படி இவர் அண்மையில் நடித்த அண்ணாத்த, சாணி காயிதம், வாஷி, சர்காரு வாரி பட்டா போன்ற படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
இப்பொழுது கூட நடிகை கீர்த்தி சுரேஷ் கையில் மாமன்னன், தசரா, போலோ சங்கர் ஆகிய படங்கள்.. அடுத்தடுத்து ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை சிறப்பாக கொண்டாடினார் மேலும் விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்றுக்கு தனியாக பூஜை போட்டுள்ளார்.
பிஎம்டபிள்யூ கார் முன்பு தனது செல்ல நாயுடன் கீர்த்தி சுரேஷ் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை கீர்த்தி சுரேஷ் வைத்திருக்கும் அந்த bmw காரின் விலை 1.20 கோடி முதல் 1.80 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.